வேறு பெண்ணை கல்யாணம் செய்ததால் ஆத்திரம்.. காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!
அமராவதி: ஆந்திராவில் வேறு பெண்ணை கல்யாணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தா கோட்டலா என்ற கிராமத்தில் வசிப்பவர் நாகேந்திரா, இவர் அங்குள்ள பலசரக்கு கடையில். பணியாற்றி வருகிறார்.
நாகேந்திரா தனது சொந்த ஊரான பெத்தா கோட்டலா கிராமத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவருக்கும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், திடீரென காதலன் நாகேந்திரா காதலியிடம் இருந்து விலகினார்.

பெற்றோர் எதிர்ப்பு
ஏனெனில் சுப்ரியா வேற்று சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறி அவர்களின் காதலுக்கு நாகேந்திராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியிடம் இருந்து விலகி உள்ளார். காதலியுடன் பேசுவதை குறைத்த நாகேந்திரா, திடீரென லக்ஷுமி என்ற உறவு பெண்ணை கடந்த மாதம் கல்யாணம் செய்து கொண்டார்.

ஆசிட் வீச்சு
தன்னுடைய காதலன் நாகேந்திரா வேறு பெண்ணை கல்ணாயம் செய்து கொண்டதை கேட்டு ஆத்திரத்தில் இருந்த சுப்ரியா அவரை பழிவாங்க முடிவு செய்தார். நாகேந்திரா சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது சுப்ரியா ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதில், முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்பட்ட நாகேந்திரா அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பணம் வாங்கினார்
இந்த சம்பவம் குறித்து பேசிய நாகேந்திரா, நானும் சுப்ரியாவும் பரஸ்பரம் பிரிந்துவிட்டோம் . இதற்காக என் காதலியான சுப்ரியா என்னிடம் இருந்து பணம் வாங்கினார் என்றும் கூறினார். என் மீது அவரால் 2வதுமுறையாக தாக்குதல் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

ஆந்திராவில் பரபரப்பு
இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சுப்ரியாவை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு பெண்ணை கல்யாணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications