ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு படுதோல்வி! ஆட்சியை பிடிக்கும் சந்திரபாபு நாயுடு- எக்ஸிட்போல் சர்வே
அமராவதி: லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேகளில் கூறப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில், இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், பீகார், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரா: குறிப்பாக நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக உடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். அங்குக் காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன.
எக்ஸிட் போல்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அத்துடன் ஆந்திரா மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், 88 தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த எக்ஸிட் போல் முடிவுகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
யாருக்கு வெற்றி: இதுவரை வெளியான சர்வேக்களில் ஜெகனுக்கு தோல்வி என்றே கூறப்பட்டுள்ளது. Aaraa என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 94-104 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 71-81 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல People Pulse நிறுவனம் வெளியிட்ட சர்வேயில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 45-60 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 111-135 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
Chanaky Strategies நிறுவனத்தின் சர்வேயில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 39-49 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 114-125 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் Atma Sakshi நிறுவனம் வெளியிட்ட சர்வேயில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 98-116 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி 59-77 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது
ஜெகனுக்கு படுதோல்வி: இதுவரை வெளியான எக்ஸிட் போல் சர்வேக்களில் பெரும்பாலும் சந்திரபாபு நாயுடு + பாஜக கூட்டணியே ஆந்திராவில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு தோல்வியே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications