ஆந்திராவில் வாக்களிக்க ஆர்வமாக குவிந்த வாக்காளர்கள்! பகல் 3 மணி வரை 55% வாக்குகள் பதிவு
அமராவதி: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் மாநிலச் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு ஜெகன் மோகன் vs சந்திரபாபு நாயுடு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பகல் 4 மணி வரை 55.15% வாக்குகள் பதிவாகியுள்ளது.
நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் சேர்த்து இன்று ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது.

ஆந்திர தேர்தல்: ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும். ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் 175 இடங்கள் உள்ளன, அவற்றில் 29 இடங்கள் பட்டியல் சாதியினருக்கு (SCs) ஒதுக்கப்பட்டுள்ளன மற்றும் ஏழு பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடும் போட்டி: ஒரு பக்கம் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜெகன் மோகன் ரெட்டி களமிறங்குகிறார். மறுபுறம் ஜெகனை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு பாஜக மற்ற பவன் கல்யாண் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இது தவfர காங்கிரஸ் கட்சியும் ஒய்எஸ் ஷர்மிளா தலைமையில் களத்தில் உள்ளன.
ஆந்திரப் பிரதேச தேர்தலில் 2.02 கோடி ஆண்கள், 2.1 கோடி பெண்கள், 3,421 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 4.14 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த 4.14 கோடி வாக்காளர்கள் தான் ஆந்திராவின் அரசியலைத் தீர்மானிக்க உள்ளனர்.
நட்சத்திர தொகுதிகள்: ஜெகன் மோகன் ரெட்டி- புலிவெந்துலா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு- குப்பம், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் - பித்தாபுரம், பாஜக தலைவர் புரந்தேஸ்வரி- ராஜமகேந்திராவரம் என பல நட்சத்திர வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications