நாளை முதல் ஆந்திராவிலும் கட்டாய ஹெல்மெட்- அங்கும் சூடுபிடித்த விற்பனை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்கிற ஆணை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆந்திர தலைமைச் செயலாளர் கிருஷ்ணாராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில், சாலை பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகளை சுட்டிக்காட்டிய கிருஷ்ணாராவ், புதிய விதிமுறையை கண்காணிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கட்டாய தலைக்கவச சட்டம் நாளை நடைமுறைக்கு வரவுள்ளதால் ஆந்திரா முழுவதும் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications