‛‛என்னையவே வெயிட் பண்ண வைக்கிறியா?’’ உனக்கு யார் சம்பளம் தராங்க.. எஸ்ஐயை மிரட்டிய அமைச்சரின் மனைவி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ‛‛என்னையவே 30 நிமிடம் வரை வெயிட் பண்ண வைச்சிட்டியே. பணிக்கு வரியா? இல்லைனா திருமண விழாவுக்கு வந்தியா? உனக்கு யாரு சம்பளம் தராங்க?'' எனக்கூறி எஸ்ஐயை பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரின் மனைவி திட்டிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதையடுத்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

andhra pradesh

இதையடுத்து சட்டசபையில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானார். துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி பெயர் ஹரிதா ரெட்டி. இந்நிலையில் தான் ஹரிதா ரெட்டி அன்னமயா மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். காரை டிரைவர் ஓட்டிய நிலையில் ஹரிதா ரெட்டி டிரைவரின் அருகே உள்ள முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது எஸ்ஐ ரமேஷ் என்பவர் தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஹரிதா ரெட்டி கோபமானார். இதையடுத்து அங்கு வந்த எஸ்ஐ ரமேசை அவர் கடுமையாக திட்டினார். அதாவது ‛‛இன்னும் உங்களுக்கு பொழுது விடியவில்லையா? என்ன கான்பரன்ஸ் உனக்கு இருந்தது? திருமண விழாவுக்கு வந்தியா இல்லாவிட்டால் பணிக்கு வந்தியா? உனக்காக அரை மணிநேரம் வரை காத்திருக்கிறேன். உனக்கு சம்பளம் யார் தருகிறார்கள்? அரசா அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியா?'' என கேள்விகள் கேட்டு கடுமையாக திட்டினார்.

இதனை கேட்டு எஸ்ஐ ரமேஷ் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்து நின்றார். இதையடுத்து ஹரிதா ரெட்டியின் கார் புறப்பட்டு சென்றது. அப்போது எஸ்ஐ ரமேஷ், அவருக்கு சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் தான் எஸ்ஐ ரமேசை, அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டியின் மனைவி ஹரிதா ரெட்டி திட்டிய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதனை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛அமைச்சரின் மனைவிக்கும் ராஜ மரியாதை வேண்டுமாம். அமைச்சர் மண்டபள்ளி ராம்பிரசாத் ரெட்டின் மனைவி ராயச்சோட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை தனக்கு துணையாக வரும்படி கூறினார். போலீசாரை அடிமைபோல் எச்சரிக்கை செய்துள்ளார். பயமடைந்த போலீஸ் ஆதரவற்ற நிலையில் அவருக்கு சல்யூட் அடித்தனர்'' என தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+