எப்படிதான் கிளம்புவாங்களோ? தசராவை 'கொண்டாடி' தீர்க்க கோழி+குவார்ட்டர் கொடுத்த கட்சி.. எங்கப்பா இது?
விசாகப்பட்டினம்: தசரா பண்டிகையை "சிறப்பாக" "கொண்டாடி" தீர்க்க உயிருடன் கோழியும் குவார்ட்டர் சரக்கும் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.
வட இந்தியாவின் முதன்மையான பண்டிகைகளில் நவராத்திரி விழா. பல வாரங்களாக நடைபெறும் நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ராவணன் உள்ளிட்டோர் உருவபொம்மைகளை எரித்து 'கொண்டாடுவர்'. நவராத்திரி இறுதி நாளில் சிலைகளை நீர்நிலைகளை கரைத்து நிறைவு செய்வர்.

ஆந்திரா நவராத்திரி: ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகளோ 'மாற்றி யோசி' என வித்தியாசமாக நவராத்திரியை கொண்டாடி முகம் சுளிக்க வைத்திருக்கின்றனர். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்தவர் ஆளும் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் நேற்று தசரா பண்டிகையை முன்னிட்டு டொட்டி பாபு ஆனந்த் விநோத பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.

கோழியும் குவார்ட்டர் சரக்கும்: அதாவது வார்டு 31-ல் ஒரு வீடு முன்பாக டேபிள் போட்டு அந்த டேபிளில் உயிருள்ள பிராய்லர் கோழிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவார்ட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி + குவார்ட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கருத்து தெரிவிக்க மறுப்பு: இந்த சர்ச்சை சம்பவம் தொடர்பாக உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அத்தொகுதி எம்.எல்.ஏ.வான வசுபாலி கணேஷ் குமாரும் செய்தியாளர்களின் 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' என இருந்து வருகிறார். இப்போது இந்த கோழியும் குவார்ட்டரும் விவகாரம்தான் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

ஆந்திரா தேர்தல்: ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்குதேசம் ப்ளஸ் ஜனசேனா, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் களத்தில் உள்ளன. லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக மாறுபட்ட கருத்து கணிப்புகளும் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications