நிஜ திரில்லர்-ஆந்திரா எம்பி மனைவி, மகன் கடத்தல்-ரூ.1 கோடி தரப் போன ஆடிட்டரும் கடத்தல்-மீட்ட போலீஸ்!
விசாகப்பட்டினம்: திரைப்பட காட்சிகளைப் போல ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 அதிரவைக்கும் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் எம்.வி.வி. சத்யநாராயணா. இவரது மனைவியும் மகனும் திடீரென மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிக்க அக்கடத்தல் கும்பல் ரூ1 கோடி பேரம் பேசியிருக்கிறது.

இதனையடுத்து ரூ1 கோடி பணத்துடன் எம்.பி.யின் ஆடிட்டர் கடத்தல் கும்பல் வர சொன்ன இடத்துக்கு சென்றது. ஆனால் பணத்தை பறித்துக் கொண்ட அக்கடத்தல் கும்பல் எம்.பி.யின் ஆடிட்டர் வெங்கடேஸ்வர ராவையும் தூக்கியது.
முதலில் எம்பி மனைவி- மகன்; அடுத்தது எம்பியின் ஆடிட்டர் என அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்களால் விசாகப்பட்டினம் போலீஸ் அதிர்ந்தது. ஆனால் அடுத்த 3 மணிநேரத்தில் ஒட்டுமொத்த கடத்தல் சம்பவமும் முடிவுக்கு வந்தது.
ஆடிட்டரிடம் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண்கள், ஆடிட்டரின் மொபைல் எண் ஆகியவற்றை வைத்து எளிதாக கடத்தல் கும்பலை சேஸ் செய்து மடக்கியது போலீஸ். திரைப்படங்களை மிஞ்சக் கூடிய வகையிலான இக்கடத்தல் சம்பவத்தில் பெரும்பாலான நபர்கள் சிக்கிவிட்டனர். கடத்தல் கும்பலின் தலைவன் இன்னமும் சிக்கவில்லை. இச்சம்பவத்தில் போலீசார் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.
அதேநேரத்தில் எம்.பி.யின் மனைவி, மகன் எப்போது கடத்தப்பட்டனர்? அதை ஏன் எம்.பி. தரப்பு போலீசுக்கு சொல்லவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.
சினிமா சினிமாதான்!
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications