Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. போல ஆந்திரா: புல்டோசரை களமிறக்கிய சந்திரபாபு நாயுடு! ஜெகன் கட்சி மத்திய அலுவலகம் தரைமட்டம்!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களைப் போல பாஜக கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் ஆளும் ஆந்திராவிலும் 'புல்டோசர்கள்' மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி அருகே முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் புல்டோசர் கொண்டு இன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம்- ஜனசேனா- பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வியை எதிர்கொண்டது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது. ஜனசேனாவுக்கு 20 இடங்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும் பாஜகவுக்கு 8 இடங்களும் கிடைத்தன. அம்மாநிலத்தின் புதிய முதல்வராக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண், துணை முதல்வராகி இருக்கிறார்.

jagan mohan reddy andhra

சந்திரபாபு நாயுடு முதல்வரானது முதலே ஜெகன் மோகன் மற்றும் அவரது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் படுதீவிரமடைந்துள்ளன. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு முன்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தில் கட்டப்பட்டிருந்த செக்யூரிட்டி பூத் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனையடுத்து ரூ500 கோடியில் ஜெகன் மோகன் ரெட்டி, மலைகளை வெட்டி கட்டியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு பங்களா குறித்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஆந்திராவில் பல இடங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்சி அலுவலகங்களும் இடிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமராவதி அருகே தடேபள்ளியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகத்தையும் புல்டோசர்கள் மூலம் இன்று இடித்து தரைமட்டமாக்கினர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு பதற்றம் நிலவியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+