மாமியார் விற்பனைக்கு.. வயது 60, 'இனிமையான' குரல், "குட் கண்டிஷன்".. ஆன்லைனை அதிர வைத்த மருமகள்!
டெல்லி: இந்தியாவில் கார்கில் போர், உள்நாட்டு போர், அரசியல் வாதிகள் போரெல்லாம் கூட ஓய்ந்துவிடும். ஆனால், முடிவே இல்லாத "அக்கப்போர்" என்றால் அது மாமியார் - மருமகள் சண்டைதான்.
இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் "அமைதிப்படை வீரர்"கள் நிலைமைதான் ரொம்ப பரிதாபம்.
வம்சாவளியாக தொடரும் இந்த சண்டைக்கு உச்சம் வைக்கும் வகையில் ஒரு கோவக்கார மருமகள், மாமியார் குலமே அதிரும் வகையிலான செயலைச் செய்துள்ளார்.

அப்டியே காக்கா ஸாரி.. “குயில்” குரல்:
ஒரு பண்டமாற்று இணையதளத்தில் தன்னுடைய மாமியாரின் புகைப்படத்தினை அப்லோட் செய்து "60 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மாமியார் விற்பனைக்கு. இனிமையான குரல், சுற்றுவட்டாரத்தில் யாரையும் இருக்க விடாத குரல்.

இக்கும்..உப்பே இல்லை சாப்பாட்டில்:
அருமையான உணவு வல்லுனர், நீங்கள் என்ன சமைத்தாலும் நல்ல கமெண்ட் வரவே வராது. நல்ல ஆலோசகரும் கூட...எப்போதுமே நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய வேலை இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்:
மேலும், இந்த விற்பனைப் பதிவினை "நல்ல நிலையில் உள்ள மாமியார் விற்பனைக்கு" என்று புத்தகத்திற்கு பதிலாக விற்பனை செய்யப்படும் மன அமைதிக்காக என்றும் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தமே காரணம்:
இந்த பதிவு 10 நிமிடங்களில் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டாலும், மண வாழ்க்கை சார்ந்த கோபங்கள் தற்போது இதுபோன்ற விற்பனை தளங்கள் வழியாக மன அழுத்தமாக வெளிப்படத் துவங்கியுள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக நீக்கம்:
மேற்படி விளம்பரம் வெளியாக இணையதளத்தின் துணை நிறுவனர், "இது போன்ற பதிவுகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. எனவே, உடனடியாக அதனை நீக்கி விட்டோம். எனினும், முதல் முறையாக இது போன்ற பதிவினைப் பார்க்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதுக்கு இது பரவாயில்லை:
கடந்த வருடம் இதே போன்று ஒரு விற்பனை இணையதளத்தில் கணவனின் புகைப்படத்தினைப் போட்டு மனைவி ஒருவர் "செல்லப் பிராணிகள்" விற்பனை வரிசையில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
"அத்தே.. நீ செத்தே"ன்னு இப்படிப் போட்டுட்டீங்களேம்மா..என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications