Flash Mob.. பஸ் ஸ்டாண்டில் ஆடிய இளம் பெண்: கன்னத்தில் பளார் விட்டா அம்மா- வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மக்கள் கூட்டம் அதிகமிருந்த பையானூர் பஸ் ஸ்டாண்டில் இளசுகள் பட்டாளம் ஒன்று நடனமாடிக்கொண்டிருந்த போது, அங்கு இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, இளம்பெண்ணின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிவி சேனல்களில் செட்களில் கூட்டம் கூட்டமாக நடனமாடுவது ஒருவகை. மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சினிமா பாடல்கள் போட்டு பிளாஷ் மாப் என்ற பெயரில் கூடி நடனமாடுவது மற்றொரு வகை. பொது இடங்களில் இளசுகள் பட்டாளம் பிளாஷ் மாப் நிகழ்ச்சிகள் நடத்துவது தற்போது பிரபலமடைந்து வருகிறது. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்களில் இத்தகைய நடனங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

சட்டசபை தேர்தலில் வாக்களிப்பது பொதுமக்களின் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில், பேருந்து நிலையங்களில் இளைஞர்கள், இளம் பெண்கள், சினிமா பாட்டுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.

காஞ்சியில் இதுபோன்ற நடன நிகழ்ச்சி அரங்கேறியது. சாலையில் செல்வோர், பயணிகள், வாகனங்களில் செல்வோர், அதை ஆச்சர்யமாக நின்று பார்த்தனர். வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.

இதேபோல கேரள மாநிலத்தில் உள்ள பையனூர் பேருந்து நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடினர். ஏராளமான பொதுமக்கள் இந்த நடனத்தை உற்சாகத்துடன் பார்த்தனர். பலர் தங்களின் மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.

மாணவர்கள் பட்டாளம் நடனமாடி முடித்து விட்டு சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பின்னர் மீண்டும் நடனமாட தயாராகினர். அப்போது அங்கு வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, இளம்பெண்ணின் கன்னத்தில் பளார் என்று அடித்தார். இதைப் பார்த்த இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

விசாரணையில் கன்னத்தில் அடித்த பெண் அந்த இளம்பெண்ணின் தயார் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+