கலிங்கப்பட்டினம் கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.. அடித்துச் சென்ற விலங்குகளின் சிலைகள்
Recommended Video
அமராவதி: பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கலிங்கப்பட்டினம் கடற்கரையில் தண்ணீரின் அளவு அதிகரித்து அங்கிருந்த விலங்குகளின் சிலைகள் அடித்து செல்லப்பட்டன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தென்னிந்தியாவையும் வடஇந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகள் என வேகமாக நிரம்பி வருகின்றன.
ஒடிஸா, குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கலிங்கப்பட்டினம்
ஒடிஸாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகள் கனமழையால் நிரம்பியதால் அந்த நீர் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வம்சதாரா மற்றும் நாகவலி ஆறுகளுக்கு வழிந்தோடுகிறது. இதனால் வம்சதாரா ஆற்றிலிருந்து 1 லட்சம் கனஅடி நீரானது ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் கடற்கரைக்கு நேற்று திறந்து விடப்பட்டது.

ஆர்ப்பரிக்கும் கடல்
இதனால் வங்க கடலோரத்தில் உள்ள கலிங்கப்பட்டினத்துக்கு ஏராளமான வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கலிங்கப்பட்டினம் கடற்கரையில் வெள்ளநீர் அதிகரிப்பால் தண்ணீர் வேகமாகவும் ஆர்ப்பரித்தும் வெளியே வந்து அங்கிருக்கும் விலங்குகளின் சிலை மீது மோதுகிறது.

வேதனை
இதனால் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட மிருகங்களின் சிலைகள் கடற்கரையில் அடித்து செல்லப்படுகின்றன. கடற்கரைக்கு அழகுக் கொடுத்து வந்த இந்த சிலைகள் தண்ணீரில் உடைந்து அடித்துச் செல்லப்படுவதை பார்க்கும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
|
ஆங்கிலேயர் காலத்தில்
கலிங்கப்பட்டினம் கடற்கரை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது முக்கிய துறைமுகமாக பார்க்கப்படுகிறது. இந்த துறைமுகம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications