Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடத்தில் அத்துமீறல்! கண்ட இடத்தில் தொட்ட நடிகர்! துறையை விட்டே விலகுவதாக பிரபல நடிகை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நமது நாட்டில் பெண்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படித் தான் பொது நிகழ்ச்சியில் மேடையில் இளம் நடிகை ஒருவரிடம் சக நடிகர் அத்துமீற நடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட மொழிப் படங்களிலேயே இனிமேல் நடிக்கப்போவதில்லை என அந்த நடிகை அறிவித்துள்ளார்.

சினிமா துறை இப்போது ரொம்பவே மாறிவிட்ட போதிலும் இன்னுமே ஆங்காங்கே நடிகைகள் மீது அத்துமீறல் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் இப்போது நடந்துள்ளது. லக்னோவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், போஜ்புரி நடிகர் பவன் சிங் தன்னைத் தவறாகத் தொட்டதாகப் பிரபல நடிகை அஞ்சலி ராகவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Anjali Raghav Quits Bhojpuri Industry After Pawan Singh Inappropriate Touching at Lucknow Event

அத்துமீறிய நடிகர்

பல மியூசிக் வீடியோக்களில் நடித்துப் புகழ் பெற்றவர் அஞ்சலி ராகவ். இவரும் பவன் சிங்கும் இணைந்து நடித்த 'சையா சேவா கரே' என்ற பாடலை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் லக்னோவில் நடந்தது. அப்போது அஞ்சலியின் இடுப்பைப் பவன் சிங்க தவறான முறையில் தொட்டிருக்கிறார். பவன் சிங்கின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அஞ்சலி, இனி போஜ்புரி துறையிலேயே பணியாற்றப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது மௌனம் குறித்து பலர் கேள்வி எழுப்பியதாகவும் அஞ்சலி கூறினார். சிலர் அவர் ஏன் உடனடியாகக் கோபத்தைக் காட்டவில்லை அல்லது பவனை அறையவில்லை எனக் கேட்டதாகவும், வேறு சிலர் இந்தச் சம்பவத்தின் போது நன் சிரித்துக் கொண்டு இருந்தது தவறு எனக் குற்றம் சாட்டியதாகவும் தெரிவித்தார்.

அஞ்சலி வீடியோ

இதற்கிடையே இன்று அஞ்சலி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். இந்தச் சம்பவம் நடந்த போது நான் ஏன் எதுவும் சொல்லவில்லை.. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் அவரை அறையவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.. சிலர் என்னைக் குறை கூறுகிறார்கள்.. நான் சிரித்ததாகவும் ரசித்ததாகவும் கூட சில நெட்டிசன்கள் சொல்கிறார்கள். என் அனுமதியின்றி பொது இடத்தில் யாராவது என்னைத் தொட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேனா அல்லது அதை ரசிப்பேனா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேடையில் பார்வையாளர்களை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தபோது, பவன் சிங் தனது இடுப்பைச் சுட்டிக்காட்டி, அங்கே ஏதோ சிக்கி இருப்பதாகக் கூறினாராம். புதிய டிரஸ் என்பதால் அதில் விலை டேக் சிக்கியிருக்கும் என நினைத்ததாலேயே சிரித்ததாகவும் பவனிடம் கோபத்தைக் காட்டாமல் தொடர்ந்து மேடையில் பேசியதாகவும் அஞ்சலி கூறுகிறார்.

அழுதுவிட்டேன்

தொடர்ந்து பேசிய அஞ்சலி, "பின்னர், என் டீமிடம் எதாவது அங்கே இருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். அப்போதுதான் நான் மிகவும் வருத்தப்பட்டேன், கோபப்பட்டேன், அழுதுவிட்டேன். ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போதே பவனை சந்திக்க முயன்றேன். ஆனால் அதற்குள் பவன் சிங் கிளம்பிவிட்டார்.. பிறகு நானும் இதை விட்டுவிட்டேன்.. அடுத்த நாள் வீடு திரும்பியபோதுதான் இந்தச் சர்ச்சை பெரிய அளவில் மாறியதை உணர்ந்தேன்.

பவன் சிங்கின் பிஆர் டீம் மிகவும் வலிமையானது என்பதால், இந்த விஷயத்தில் பவன் பற்றி எதுவும் கருத்து சொல்ல வேண்டாம் என்று எனது டீம் சொன்னார்கள். நானும் சரி இந்தப் பிரச்சனை ஓரிரு நாட்களில் போய்விடும் என்று நம்பினேன்.. ஆனால் அது மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே போகிறது.. எந்த ஒரு பெண்ணையும் அனுமதியின்றித் தொடுவதை நான் ஆதரிக்கவில்லை. அதுவே தப்பு தான். அதிலும் இதுபோல பொது இடத்தில் வைத்துத் தொடுவது மிகவும் தவறு.

இனி நடிக்கப் போவதில்லை

இதே விஷயம் எனது சொந்த மாநிலமான ஹரியானாவில் நடந்திருந்தால், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அங்கிருக்கும் மக்களே பதிலளித்திருப்பார்கள். ஆனால் நான் லக்னோவில் இருந்தேன், அது என் இடம் இல்லை. நான் இனிமேல் போஜ்புரி துறையில் பணியாற்ற மாட்டேன்" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+