கேஜ்ரிவால் அரசு பிழைக்குமா?- ஹஸாரே
புனே: டெல்லியின் ஆட்சியைப் பிடித்தாலும் ஆம் ஆத்மி அரசு பிழைக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார் அன்னா ஹஸாரே.
இருந்தபோதிலும் கேஜ்ரிவால் போராடி அரசை காப்பாற்ற வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மறுநாள் பொறுப்பேற்கிறார்.

கட்சி தொடங்கிய சில மாதங்களுக்குள் ஒரு மாநிலத்தின் ஆட்சியையே அவர் பிடித்திருப்பது குறித்து அன்னா ஹஸாரேயிடம் கேட்டபோது, "நான் ஏற்கனவே கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன்.
அவர் நல்ல ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் இந்த அரசு எத்தனை நாள் வரை பிழைக்கும் என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இப்போதும் அந்தக் கட்சி என்பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற என் நிலையில் மாற்றமில்லை.
2014 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு மாற்றாக வரும் என்றுதான் நினைக்கிறேன். இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்.," என்றார்.












Click it and Unblock the Notifications