ரூ. 9.11 லட்சத்துக்கு ஏலம் போன அன்னா ஹஸாரேவின் ஸ்கார்ப்பியோ!
மும்பை: சமூக சேவகர் அன்னா ஹஸாரே பயன்படுத்தி வந்த ஸ்கார்ப்பியோ கார் ரூ. 9.11 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
கடந்த எட்டு வருடமாக இந்தக் காரை அன்னா பயன்படுத்தி வந்தார். பல்வேறு முக்கியமான போராட்டங்களுக்கு இந்தக் காரில்தான் அவர் பயணித்துள்ளார்.
இந்தக் கார் இன்று மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ. 9.11 லட்சத்திற்கு கார் இறுதியாக ஏலம் போனது.

அன்னாவின் நெருங்கிய கூட்டாளியான பிரவீன் என்கிற அதுல் லொகண்டே என்பவர் இந்தக் காரை ஏலத்தில் எடுத்தார். இவர் அகமது நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஏலத்தில் லொகண்டே உள்பட 15 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இந்தக் காருக்குப் பதில் புதிதாக இன்னோவா கார் அன்னாவுக்காக வாங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
80 வயதான அன்னாவுக்கு முதுகு வலி இருப்பதால், அவருக்குப் புதிய வசதியான கார் வாங்க வேண்டியது அவசியமாகியு்ள்ளதாக அவரது உதவியாளர் அன்சாரி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications