பீகார், ஒடிசாவைத் தொடர்ந்து வெள்ள நிவாரணமாக 1 கோடி ரூபாயை வழங்கியுள்ளது ஹரியாணா அரசு !
சண்டீகர்: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.1 கோடி மற்றும் நிவாரணப் பொருட்களையும் ஹரியாணா மாநில அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பெய்த வட கிழக்கு பருவமழை சென்னையை வரலாறு காணாத அளவில் புரட்டி போட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மழைநீர் புகுந்து சின்னா பின்னமாக்கியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தமிழக அரசு, அரசியல் கட்சிகள், பிற மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் சென்னை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீகார், ஒடிசா, கர்நாடகம் மாநிலங்களைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலம் நிவாரணத் தொகையாக ரூ.1 கோடியை வழங்கியுள்ளது.
இதுதவிர, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரியை அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், பானிபட்டில் இருந்து நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தேசியப் பேரிடராகும். கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழகத்துக்கு ஹரியாணா மாநிலம் துணை நிற்கும். தமிழ்நாட்டுக்குத் உதவ அனைவரும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும். பானிபட் நகர் போர்வை தயாரிப்புக்குப் பிரபலமானது. எனவே இங்கிருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள போர்வைகளை தமிழக மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார் மனோகர்லால் கட்டர்.
Announced to give Rs 1 crore out of Disaster Relief Fund of Govt. for flood victims of Tamil Nadu.
— Manohar Lal Khattar (@mlkhattar) December 6, 2015 -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications