தொட்டதெல்லாம் வெற்றி.. ஏக குஷியில் பாஜக.. விரைவில் ராமர் கோவில்.. நிஜமாகும் வாக்குறுதி!
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது விரைவில் நிஜமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது விரைவில் நிஜமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பாஜக கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போதே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது சரியாக 5 வருடங்கள் கழித்து அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. இன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தது.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வெற்றி
பாஜக கட்சிக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலம் இது என்று கூறலாம். லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெறும், பெரும்பாலும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கணிப்புகள் வெளியான நேரத்தில், பாஜக 300+ இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இந்த இமாலய வெற்றி பாஜகவிற்கு பெரிய நம்பிக்கையை தந்தது.

அதி வேகம்
அதன்பின் அதிவேகமாக பல்வேறு மசோதாக்களை பாஜக லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் நிறைவேற்றியது. முத்தலாக் சட்டம், புதிய மோட்டார் வாகன சட்டம் என்று சர்ச்சைக்குரிய சட்டங்களை கூட பாஜக ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இல்லாமல் நிறைவேற்றியது. அதன்பின்தான் மிகப்பெரிய அதிரடியை பாஜக செய்தது.

காஷ்மீர் வெற்றி
ஆம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய பாஜக அரசு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கியது. அதோடு ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கியது. லடாக் என்ற இன்னொரு யூனியன் பிரதேசமும் உருவானது. இதை பாஜகவின் பல வருட கனவு என்று கூட கூறலாம்.

பாஜகவின் கனவு
இந்த நிலையில் பாஜகவின் இன்னொரு கனவான ராமர் கோவில் தற்போது நினைவாகும் தருணம் உருவாகி உள்ளது. அயோத்தி வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு பெற்றுள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு வழங்கப்படவேண்டும், என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவில்
இதனால் பாஜக ஏக குஷியில் உள்ளது. அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்து இருக்கிறது. வெற்றி மேல் வெற்றி வந்து சேர்வதால், பாஜக மிக விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் காட்டும் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் இந்த வெற்றியை கொண்டாட பிரதமர் மோடி அயோத்தி செல்வார் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications