ஹரித்துவார் வெறுப்பு பேச்சு.. மேலும் ஒரு சாமியார் அதிரடி கைது
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற மாநாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. சில இந்து மதத் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு மக்களை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தும் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு
மேலும் ஹரித்வார் நிகழ்வில் இந்து மதத் தலைவர் சாந்த் காளிசரண் மகாராஜ் பேசியபோது, அரசியலின் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று அறிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோ வைரலாகிய நிலையில் காளிசரண் மகாராஜ் இந்து மதத்தை பாதுகாக்க ஒரு உறுதியான இந்துத் தலைவரை தேர்ந்தெடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

கடும் எதிர்ப்பு
நாடு முழுவது இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. மேலும் இதுபோன்ற பேச்சுகளை பிரதமர் கண்டிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தன. மேலும் ஹரித்துவார் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் எனவும், அவரது மெளனம் வெறுப்பு நிறைந்த குரல்களை ஊக்குவிக்கிறது என ஐஐஎம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பினர்.

சாமியார் கைது
இந்த நிலையில் ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரை உத்தரகாண்ட் காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி அந்த கூட்டத்தில் கடுமையாகப் பேசிய நிலையில் முதலில் கைது செய்துள்ள நிலையில், தற்போது யதி நரசிங்கானந்தும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஜாமீன் மறுப்பு
வெறுப்பு பேச்சு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட நிலையில், ஜிதேந்திர தியாகியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது. இந்நிலையில் தான் ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரித்வாரில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த யதி நரசிங்கானந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications