அடம்பிடித்த கர்நாடகா.. விடாது வாதாடிய தமிழகம்... லைட்டா கருணை காட்டிய மேற்பார்வை குழு
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 'காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம், 12ல் நடைபெற்றது. அப்போது, 'இரு மாநிலங்களும், தங்களுக்கு கிடைத்த நீரின் அளவு உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, மேற்பார்வைக் குழு கூறியது.

அதன்படி, 29 ஆண்டுகளுக்கான விபரங்களை தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்தன. அவற்றை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் பங்கேற்றார். மேலும் ஆலோசனையில் கர்நாடக, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கண்காணிப்புக்குழுவிடம் தனது தரப்பு அறிக்கையை தாக்கல் செய்த கர்நாடகா, தமிழகத்திற்கு இதுவரை 13 டி.எம்.சி தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது மாநிலத்தில் 4 அணைகளில் 27 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்கு 21 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதாக குறிப்பிட்டது. மேலும் கர்நாடகத்தில் மழை 18 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்த மாநில அரசு கூறியுள்ளது. எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனிமேல் நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாக கர்நாடகா, காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது.
கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது என காவிரி மேற்பார்வை குழுவிடம் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவையை விட விவசாயம் பெரிதல்ல என்றும் கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதனை ஏற்க மறுத்துள்ள தமிழக அதிகாரிகள், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தர வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீரை தந்தே தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோரின் பசியை போக்குவது விவசாயம் தான். இது தான் அவர்களது உயிர் மூச்சு. குடிநீரைப் போலவே விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து காவிரியிலிருந்து நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரினர்.
இந்த நிலையில் மேற்பார்வைக்குழு கூட்டத்தின் முடிவில் செப்டம்பர் 21ம் தேதி முதல் மேலும் 10 நாட்களுக்கு கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும், 20 வரை, தினமும், 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி, சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர், நேற்று மதியம் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மாலையில், மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி மேற்பார்வைக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் கர்நாடக மாநிலத்தில் மைசூரு, பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான போது கர்நாடக மாநிலத்தில் கலவரங்கள் வெடித்தன. அதேபோல அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications