தமிழகத்திற்கு செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்றதாக ஆந்திராவில் 16 பேர் கைது
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திலிருந்து தமிழகத்திற்கு செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக கூறி 16 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநில அரசும், காவல்துரையும், செம்மரக் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழகத் தொழிலாளர்களை குருவி சுடுவது போல சுட்டுக் கொன்ற சம்பவத்திற்குப் பின்னர் இந்த வேட்டை தீவிரமாகியுள்ளது.

இந்த நிலையில், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிட்டங்கியிலிருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 16 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 65 லட்சம் ரொக்கப் பணம், 122 செம்மரக் கட்டைகள், 2 வாகனங்கள், ஒரு மொபைல் போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த செம்மரக் கட்டைகளை தமிழகத்திற்கு கடத்திச் செல்ல முயற்சி நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
தற்போது செம்மரக் கட்டைகள் வெட்டுவது குறைந்துள்ள போதிலும் ஏற்கனவே வெட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்டைகளை இடம்மாற்றி கடத்தும் செயல் அதிக அளவில் நடந்து வருகிறதாம். அப்படிப்பட்ட கடத்தலில் ஈடுபட்டவர்களைத்தான் தற்போது கடப்பாவில் போலீஸார் கைது செய்துள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications