Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: நெல்லூரில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்த மனைவி, உறவினர்கள் முன்னிலையில் வைத்து ஆவேசமாக அடித்து திட்டியதுடன்,நியாயமும் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், பதில் சொல்ல முடியாமல் பதறியடி காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

சமூகத்தில் உள்ள தவறான உறவுகள் குடும்பங்களை துண்டாடுகின்றன. கணவன் மனைவியை ஏமாற்றுகிறார், மனைவி கணவனை ஏமாற்றுகிறார். திருமணத்தை மீறிய தவறான உறவுகளால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பாழாகிறது. அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது.

AP : wife caught her inspector husband red handed with another woman in nellore

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள போஸ்டல் காலனியில் கள்ளக்காதல் விவாகரம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லூரில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக உள்ள வாசு என்பவர், திருமணத்தை மீறிய உறவில், வேறொரு பெண்ணுடன் தனியாக இருந்தபோது முதல் மனைவியால் கையும் களவுமாக பிடிபட்டார். தனது கணவரையும், கணவரின் கள்ளக்காதலியையும்,கடுமையாக விமர்சித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி ஆந்திராவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

சரி என்னதான் நடந்தது கொஞ்சம் விரிவாக பார்ப்போம். குண்டூரைச் சேர்ந்த வாசு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வாசு தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்.

வாசு நெல்லூரில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் கணவன் மனைவி இடையே தகராறு அதிகரித்துள்ளது. அதன்பிறகு வாசு வீட்டுக்கு வருவதை நிறுத்தினார். அன்றிலிருந்து வாசுவின் மனைவி தனது குழந்தைகளுடன் குண்டூரில் தங்கியிருக்கிறார்.

இதற்கிடையில், 2017ல் மனைவி, பிள்ளைகளைக் கைவிட்ட வாசு அடுத்த ஆண்டே வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். அத்துடன் நெல்லூரில் போஸ்டல் காலனியில் அந்த பெண்ணுடன் வசித்து வந்தாராம்.தன்னையும், தன் பிள்ளைகளையும் விட்டுச் சென்ற தன் கணவன் மீது கடுங்கோபத்தில் இருந்த வாசுவின் முதல் மனைவி சமயம் பார்த்து, கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்கு உறவினர்களுடன் சென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து நியாயத்தைக் கேட்டார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AP : wife caught her inspector husband red handed with another woman in nellore

இதனிடையே வாசுவின் வாதம் வேறு விதமாக உள்ளது. மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்ததால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற கோர்ட்டுக்கு சென்றதாகவும், தற்போது நீதிமன்றத்தில் வாதங்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் அவரைப் பார்க்க முடியாததால் மௌனிகா என்ற பெண்ணுடன் தங்கியிருந்ததாக அவர் கூறினார். ஏதாவது இருந்தால் போலீசில் சொல்லுங்கள், ஆனால், தன் வீட்டை இப்படி தாக்குவது சரியல்ல என்று வாசு கூறினார்.

எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் சட்டவிரோத உறவுகளை தொடர்வதும், கள்ளக்காதலில் ஈடுபடுவதும் சரியானது அல்ல என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படுவது இயற்கையானது, அதைத் தீர்க்க முடியாது என்று நினைத்து இதுபோன்ற முடிவுகளை எடுக்கக்கூடாது என்று பலர் வேண்டுகோள் வைக்கிறார்கள். ஒருவேளை தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால், முறைப்படி விவாகரத்து செய்துவிட்டே இன்னொரு திருமணம் செய்யவேண்டும் என்றே பலரும் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+