apj@abdulkalam.com... இனி யார் இந்த மெயிலுக்கு அனுப்பும் கேள்விகளுக்குப் பதில் அனுப்புவார்...?
கொச்சி: இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட, அதிகம் நேசித்த, அதிக கேள்வி - பதில்களைப் பரிமாறிய இமெயில் ஐடி இதுவாகத்தான் இருக்க முடியும். இனி இந்த இமெயிலிலிருந்து நமக்கு பதில் வராது.. காரணம், அந்த இ மெயிலின் "முகவரி"யை நாம் இழந்து நிற்கிறோம்.
[email protected].. இதுதான் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் பயன்படுத்தி வந்த இமெயில் முகவரியாகும். இனி இந்த மெயில் ஐடி அமைதியாக உறங்கப் போகிறது. பல லட்சம் இந்தியர்களின் சந்தேகங்களுக்கும், யோசனைகளுக்கும் அயராமல் இந்த இமெயில் மூலம் பதிலளித்து வந்தார் கலாம்.

www.abdulkalam.com என்பது அப்துல் கலாம் பயன்படுத்தி வந்த அதிகாரப்பூவ இணையதளமாகும். அவரது நெருங்கிய உதவியாளரான வி.பொன்ராஜ் இந்த இணையதளத்தை நிர்வகித்து வந்தார். அப்துல் கலாமின் பக்தர்கள் அனைவருக்கும் நிழல் போல திகழ்ந்து வந்தது இந்த இணையதளம். கலாம் பேசியது, கலாமின் சிந்தனைகள், கலாம் கூறிய அறிவுரைகள் என அனைத்தும் இந்த தளத்தில் நிரம்பியிருக்கிறது.
அதேபோல [email protected] என்ற இமெயில் முகவரியை, தான் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கூட தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் கலாம். குடியரசுத் தலைவருக்குரிய இமெயில் முகவரியுடன், இந்த தனிப்பட்ட முகவரியையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். வந்து குவிந்த மெயில்களை தவறாமல் படித்தும் வந்தார். பதிலளித்தும் வந்தார்.
2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆனது முதல் 2007ம் ஆண்டு வரை கலாமின் இந்த மெயில் ஐடி எப்போதும் பிசியாக இருந்தது. அதற்குப் பிறகு மேலும் பிசியாக மாறியதுதான் கலாமின் சிறப்புக்கு ஒரு சான்று.
இந்த மெயில் ஐடிக்கு வரும் மெயில்களை தவறாமல் படிப்பாராம் கலாம். மேலும் அதில் கேட்கப்படும் கேள்விகள், பதில்களுக்கு தவறாமல் பதிலளிப்பாராம். மிக அருமையான பதில்களாக அவை இருக்கும் என்பதுதான் விசேஷமே. மேலும் தேவையானவற்றுக்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி தனது உதவியாளர்களுக்கு அவர் அறிவுறுத்துவாராம்.
நேரில் சந்திக்கும் யாராவது ஏதாவது யோசனை, கருத்துக்களைக் கூறினால் எனக்கு மெயில் அனுப்புங்க சரியா என்று கூறுவாராம் கலாம். அப்படி அனுப்பப்படும் மெயில்களுக்கு விரிவான பதிலும் அனுப்பி வைப்பார் கலாம்.
ஒருமுறை அவருடைய உறவினர் ஒருவர் சுகவீனமடைந்திருந்தார். அப்போது நமது நிருபர், அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேட்டி வேண்டும் என்று கேட்டபோது, எனது பதில் எங்கேயும் போய் விடாது. யாரும் எடுத்து விட மாட்டார்கள். எனது குடும்ப உறுப்பினர் சுகவீனமடைந்துள்ள இந்த நேரத்தில் நான் பேட்டி தர விரும்பவில்லை என்று அமைதியாக பதிலளித்தார் கலாம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அவரிடமிருந்து அழைப்பு. உடனே வந்து பேட்டி எடுக்கலாம் என்று.
ஒன்இந்தியா-தமிழ் ஆசிரியர் ஏ. கே. கான், கலாமை சமீபத்தில் சந்தித்தபோது, ஒன்இந்தியா இணையதளம் பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வருவதை அறிந்து, நீங்கள் போட்டுள்ள அருமையான செய்திகளின் இணைப்புகளை எனக்கு மெயில் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அனுப்பிய அந்த செய்திகளின் இணைப்புகளை, தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் ஷேர் செய்திருந்தார்.
அவர்தான் கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications