Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லகான்".. மொத்தமா "குத்திட்டாங்களே".. நாகலாந்தை சுற்றி வந்த புள்ளி.. பாஜகவுக்கே வெற்றி: எக்ஸிட் போல்

நாகாலாந்து எக்ஸிட் தேர்தல் கணிப்புகளை தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன

Subscribe to Oneindia Tamil

கோஹிமா: நாகாலாந்தில் இன்றைய தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கான எக்ஸிட் போல்கள் வெளியாகி உள்ளன.. அந்த வகையில், நாகாலாந்தில் பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என்று அனைத்து கருத்துகணிப்புகளும் தெரிவித்துள்ளன.

நாகாலாந்து மாநிலத்தில், உள்ளூர் நாகா கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது பாஜக.. இந்த பாஜக - என்டிபிபி கூட்டணியில் 20 - 40 என்ற விகிதத்தில் தேர்தல் களம் காணுகிறது.

அதே போல, காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் களம் காணுகின்றன.. மொத்தமுள்ள 60 இடங்களில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. அந்த வகையில், மற்ற 59 இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

சூப்பர் ப்ளான்

சூப்பர் ப்ளான்

நாகாலாந்தை பொறுத்தவரையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில், கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.. ஆனால் என்டிபிபி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

தேசியவாதம்

தேசியவாதம்

அதற்கு பின்னர், நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு கூண்டோடு தாவியதால், எதிர்க்கட்சியே இல்லாத ஓர் ஆட்சியே அங்கு நடைபெறுகிறது... இந்த நம்பிக்கையில்தான், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைமையிலான கூட்டணியே மறுபடியும் ஆட்சியை பிடிக்க போவதாக ஆளும் அரசு நம்பிக்கையுடன் சொல்லிவருகிறது.. இதற்காகவே, தங்களுடைய பிரச்சாரத்திலும் பாஜக கவனத்தை திருப்பியது.. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பிறகு நடக்கும் 2வது தேர்தல் இது என்பதால்தான், பாஜக இந்த மாநில தேர்தலை அதிக கவனத்துடனே கையாண்டது..

கெத்து லுக்கில் மோடி

கெத்து லுக்கில் மோடி

எப்படியாவது வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் அழுத்தமாக காலூன்றி விடவேண்டும் என்றும் கணக்கு போட்டது.. கடந்த வாரங்களில் நாகாலாந்து மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா இருவருமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.. இதற்கு பிறகு பிரதமர் மோடியும் நாகாலாந்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார்.. சுமௌகெடிமா என்ற இடத்தில் பிரச்சார பேரணியில் அவர் கலந்துகொள்ள வந்தபோது, அந்த மாநிலத்தின் பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தது, மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.. எங்கு திரும்பினாலும் பாஜகவின் பிரச்சாரங்களாகவே அம்மாநிலத்தில் தென்பட்டது..

குறி காங்கிரஸ்

குறி காங்கிரஸ்

அப்போது பிரதமர் பேசும்போது, காங்கிரஸையே குறி வைத்து சாடியிருந்தார். "டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் நாகாலாந்து மாநிலத்தை கண்டுகொள்ளவில்லை. அதன் வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை. நிலையான பொருளாதாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. டெல்லியில் இருந்து திமாபூர் வரைக்கும் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்துள்ளது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்ல, நாகாலாந்து சிறப்பு அதிகார சட்டம் பகுதியளவு நீக்கப்பட்டது மற்றும் மாநிலத்தின் 16 மாவட்டங்களை பிரித்து தனி மாநிலமாக்கும் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது போன்ற செயல்பாடுகளை பாஜக முன்னெடுத்திருந்ததும், அக்கட்சிக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

வீக் பாயிண்ட்ஸ்

வீக் பாயிண்ட்ஸ்

ஆனால், நாகாலாந்தில் காங்கிரஸ் பலவீனமாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் ஆரம்பத்தில் இருந்தே கருத்து சொல்லி வருகிறார்கள்.. கடந்த தேர்தலின்போதும், ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.. அதனால்தான் இந்த முறையாவது, வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது.. கடந்த முறையும் தேர்தலில் தோல்வியுற்றுவிட்டதால், சாதனைகளை சொல்லி காங்கிரஸால் ஓட்டு கேட்க முடியவில்லை.. எனவே, நாகலாந்தின் தீர்க்கப்படாத பிரச்சனைகளை கையில் எடுத்து, பாஜகவை விமர்சித்து பிரச்சாரத்தை நடத்தியது காங்கிரஸ்.. உள்கட்டமைப்புப் பணிகள் எல்லாம் சுத்தமோசம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி வலம் வந்தது.

சுத்த மோசம்

சுத்த மோசம்

இந்தசூழலில்தான், இன்றைய தினம் 60 தொகுதிகளில், 59 இடங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. அகுலுடோ சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் திடீரென வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டார். மற்ற 59 இடங்களில் பாஜக கூட்டணி + நாகா மக்கள் முன்னணி + காங்கிரஸ் + ஜனதா தளம், ஆம் ஆத்மி + ஆர்பிபி + வடகிழக்கு ஜனநாயக முன்னணி போன்ற புதிய கட்சிகளும் தேர்தல் களமிறங்கின..

காங்கிரஸ் காலி

காங்கிரஸ் காலி

இன்றைய தினம் வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தன.. தற்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்று சொல்லப்படும் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன.. அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டிருந்த எக்ஸிட் போல் முடிவில், நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி: 38-48 இடங்களையும், என்பிஎப் 3-8 இடங்களையும், காங்கிரஸ் 1-2 இடங்களையும் பிடிக்கும், மற்றவை 5-15 வரையிலான இடங்களை பிடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதேபோல, என்டிடிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 42 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், என்பிஎப்-க்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன.

பாஜக சபாஷ்

பாஜக சபாஷ்

அதேபோல, டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பிலும் பாஜக 39-49 வரையிலான இடங்களை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது என்றும் என்பிஎப்-க்கு 4 முதல் 8 வரையிலான இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கணிப்பில், பாஜக கூட்டணி 43 இடங்களையும், என்.பி.எஃப். 5இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், மற்றவை 10 இடங்களையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே நாகாலாந்து எகிஸ்ட் போல் முடிவுகளின்படி, பாஜக 10-14, என்பிஎப் 3-8,,என்பிபி 28-34,,காங்கிரஸ் 1-2 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாஜகவுக்கே பிரதான வெற்றி கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேஜர் மேட்டர்

மேஜர் மேட்டர்

இதெல்லாம் ஒரு கணிப்புகள் என்றாலும், மார்ச் 2-ம் தேதிதான் வாக்குகள் வெளியாகி முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.. யார் வெற்றி பெற்று வந்தாலும் 2 விதமான பிரச்சனைகளை நாகாலாந்து எதிர்நோக்கி உள்ளது.. முதலாவதாக, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பதே அங்கு இதுவரை கிடையாது.. இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஒரு பெண் எம்எல்ஏகூட இதுவரை இருந்ததில்லையாம்.. கடந்த 2017-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவே நாகாலாந்தில் வன்முறை வெடித்து 2 உயிர்களை காவு வாங்கிவிட்டது.

ஸ்ட்ராங் கோரிக்கை

ஸ்ட்ராங் கோரிக்கை

எனினும், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இதுவரை அம்மாநிலத்தில் இல்லை.. ஆளுங்கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 2 பெண் வேட்பாளர்களையும், பாஜக ஒரு பெண் வேட்பாளரைரயும் அறிவித்திருக்கிறது.. எனவே, இந்த தேர்தலிலாவது அந்த குறைபாடு நீங்குமா? என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது... அடுத்ததாக தனி நாடு என்பதுதான், நாகலாந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது... நாகாலாந்தில் தனிநாடு கேட்டு போராடும் பிரிவினைவாத இயக்கங்கள் இன்னமும் செயல்பட்டு வருகின்றன. இறுதிவரை தனிநாடு கோரிக்கையை நாகாலாந்து மக்கள் கைவிடாத நிலையில், இந்த முக்கிய கோரிக்கையை யார் நிறைவேற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக வலம்வந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+