‘டாடி’ படத்திற்காக தாதா அருண் காவ்லியைச் சந்தித்த நடிகருக்கு சம்மன்!
மும்பை: முன் அனுமதி பெறாமல் தண்டனைக் கைதியாக உள்ள நிழல் உலக தாதா ஒருவரைச் சந்தித்ததற்காக நடிகர் ராம்பாலுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அருண் காவ்லி. பின்னர் அரசியல் கட்சியில் சேர்ந்த அருண், கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றார்.

கடந்தமாதம் மருத்துவ பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அருண். அப்போது பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், அருணை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக, போலீசாரிடம் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை.
ராம்பால் தற்போது, 'டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம், அருண் காவ்லியின் வாழ்க்கை தொடர்பானது. அதனால், காவ்லி பற்றிய விஷயங்களை அறிந்து கொள்வதற்காகவே, அவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனபோதும், போலீசாரின் அனுமதி பெறாமல் தண்டனைக் கைதியை சந்திக்கக் கூடாது என்பதால், நடிகர் ராம்பாலுக்கு, மும்பை போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகரின் வீட்டிற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. எனவே, விரைவில் அவர் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications