காஷ்மீரில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொலை, 9 ராணுவ வீரர்களே குற்றவாளிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்கள்தான் குற்றம் செய்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்கம் பகுதியில் இருந்து புல்வாமா மாவட்டத்திற்கு ஒரு காரில் தீவிரவாதிகள் செல்வதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இடையில் உள்ள பட்காம் மாவட்டத்தில் ராணுவத்தினர் 3 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இளைஞர்கள் சிலர் சென்று கொண்டிருந்த மாருதி கார், ராணுவத்தினர் அமைத்திருந்த 2 சோதனை சாவடிகளில் நிற்காமல் சென்றது. இதையடுத்து சட்டர்காம் பகுதியில் உள்ள 3-வது சோதனைச்சாவடியில் காரை ராணுவத்தினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த கார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றது. இதனால் ராணுவ வீரர்கள் அந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், காரில் இருந்த 2 இளைஞர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் 2 காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ராணுவம் இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது. விசாரணை முடிவடைந்தது அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்களின் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாருதி கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது ராணுவ வீரர்கள் தவறு செய்துவிட்டனர். ராணுவ வீரர்கள் காரில் தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனர் என்று தவறுதலாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications