அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இடா நகர்: அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு தொடர்பான ரோந்து பணிகளிலும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அருணாசல பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்துள்ளனர். இதனால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த பைலைட்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. அருணாசல பிரதேசம் மிகவும் மலைப்பாங்கான பகுதி என்பதால் சாலை மார்க்கமாக செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
எல்லைப் பகுதி மாநிலமான அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் பகுதியில் தான் பொம்திலா என்ற இடம் உள்ளது. மலைப்பகுதிகளை கொண்ட இந்த இடத்தில்தான் விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்துக்கான காரணம் மற்றும் விமானிகளின் நிலை குறித்து தொடர்ந்து முழு வீச்சில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications