அர்னாப் கோஸ்வாமி யாருடன்தான் பஞ்சாயத்துக்கு போகலை... ஓயாத சர்ச்சைகள்! #arnabgoswami
டைம்ஸ் நவ் டிவி தலைமை செய்தி ஆசிரியர் பணிக் காலத்தில் அர்னாப் கோஸ்வாமி உருவாக்கிய சர்ச்சைகளின் கதை இது.
டெல்லி: டைம்ஸ் நவ் டிவியில் அர்னாப் கோஸ்வாமி 'கத்திக் கொண்டிருக்கும்' வேலையை கச்சிதமாக செய்யவில்லை.. பல களேபர சர்ச்சைகளின் கதாநாயகனாகவும் இருந்திருக்கிறார்.
டைம்ஸ் நவ் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் அர்னாப் கோஸ்வாமி. டைம்ஸ் நவ் டிவியை ரேட்டிங்கில் முதலிடத்தில் தக்க வைத்திருந்தார் என்பது மட்டுமல்ல அர்னாப் கோஸ்வாமிக்கான பெருமை..

அர்னாப் கோஸ்வாமி சிக்கிய சர்ச்சைகளை வைத்தை 'India wants to Know' என்ற தலைப்பில் 100 மணிநேர விவாதமே நடத்தலாம்.
கடந்த ஆண்டு இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்; இது தொடர்பான மின் அஞ்சல்கள் வெளியாகின... டைம்ஸ் நவ் டிவிதான் முதலில் இதை வெளியிடுகிறது என அடித்துவிட்டுக் கொண்டிருந்தார் அர்னாப். ஆனால் சக பத்திரிகையாளர்களோ, ஏன் இந்த வேலை? இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் முதலில் வெளியிட அதை காப்பியடித்துவிட்டு இந்த காட்டு கூச்சல் என கிழித்து தொங்கவிட்டன.
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்த போது என்டிடிவியின் பர்கா தத் அங்கு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அம்பலப்படுத்தினார். ராணுவத்தின் அடக்குமுறைகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருந்தன. உடனே அவரை தேசவிரோதி என சாடினார் அர்னாப் கோஸ்வாமி. இதற்கு பர்கா தத் கொடுத்தது பதிலடி 'அர்னாப் கோஸ்வாமியால் நான் வெட்கப்படுகிறேன்...அவரெல்லாம் ஒரு பத்திரிகையாளரா? என்பதுதான்..
கர்நாடகா ராஜ்யாபா சபா தேர்தலின் போது குதிரை பேரம் நிகழ்ந்தது. மும்பையில் கர்நாடகா எம்.எல்.ஏ.க்களை கர்நாடகா தொழிலதிபர் அசோக் கெனி தங்க வைத்திருந்தார். டைம்ஸ் நவ் மும்பை பெண் நிருபர் மேகா பிரசாத் சிக்கினார்.. இடைவிடாமல் அசோக் கெனியிடம் மேனகா கேள்வி எழுப்ப அவரை ஆபாசமாக திட்டினார் அசோக் கெனி. விடுவாரா அர்னாப் கோஸ்வாமி... அசோக் கெனியுடன் பெரும் அக்கப்போரையே நடத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியை ஓரிரு முறை விவாதங்களுக்கு அழைத்துவிட்டு அவரை பேசவிடாமல் குறுக்கிட்டு மல்லுக் கட்டியவர் அர்னாப் கோஸ்வாமிதான்...
இப்படியெல்லாம் அர்னாப் கோஸ்வாமி ருத்ர தாண்டவமாடிவிட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகள் கேட்கும் போது மட்டும் பம்மினாரே பாருங்கள்... அப்பா சாமி 'உலகமகா நடிப்புடா' என்பதாகத்தான் இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications