பெண்களை பர்தா அணியச் சொல்லும் ஆண்களை சிறையில் அடைக்க வேண்டும்: முலாயம் சிங் யாதவ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பெண்களை பர்தா அணியுமாறு கூறும் ஆண்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணியின் தேசிய கூட்டம் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

Arrest those who push women into purdah: Mulayam Singh Yadav

அப்போது அவர் கூறுகையில்,

பர்தா முறை தீய பாரம்பரியம் ஆகும். அதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர ஊக்குவிக்கக் கூடாது. நான் ஒரு கிராமத்திற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தபோது அங்குள்ள பெண்களை பர்தா அணியக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் பர்தாவை கழற்றிய பிறகே சாப்பிட்டேன். பர்தா அணியும் பழக்கம் அந்த கிராமத்தில் பின்னர் கைவிடப்பட்டது.

சீதை, திரௌபதி, சாவித்ரி போன்றோர் பர்தா அணியவில்லை. பெண்களை பர்தா அணிய ஊக்குவிக்க வேண்டாம் என்று நான் ஆண்களை கேட்கு கொண்டுள்ளேன். பெண்களை பர்தா அணியுமாறு வற்புறுத்தும் ஆண்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.

பெண்கள் பல துறைகளில் உள்ளனர். அவர்கள் சீருடை அணிகிறார்கள். பர்தா என்னும் தீய பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது உங்கள் கையில். இலவச லேப்டாப் திட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. இலவச லேப்டாப் அளித்து என்ன நடந்தது? மோடியின் பேச்சு அனைத்து வீடுகளையும் சென்றடைந்தது. அவர்கள் தெளிவாக செய்து நாம் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+