ஊழலை ஒழிக்க உயிர்த்தியாகம் செய்ய தயார்- " 49 நாள் முதல்வர்" கேஜ்ரிவால் சபதம்!
டெல்லி: ஊழலை ஒழிப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என்று 49 நாள் டெல்லி மாநில முதல்வர் பதவி வகித்து நேற்று ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை கூட்டம் நேற்று மாலை முடிந்ததும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் கேஜ்ரிவால். பின்னர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.
கொட்டும் மழையில் அங்கு திரண்டு வந்த தொண்டர்கள் மத்தியில் கேஜ்ரிவால் பேசியதாவது:
பதவியை ராஜினாமா செய்வது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து இருக்கிறோம். சட்டசபையை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்து இருக்கிறோம்.

எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட இரண்டு நாட்களில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒன்று சேர்ந்து எங்கள் அரசை வீழ்த்த திட்டமிட்டனர். அவர்களுடைய உண்மையான முகம் வெளுத்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை அம்பானிதான் நடத்தி வந்தார். காங்கிரஸ் கட்சி அவருடைய சொந்த கடையை போன்றது. அவர் எப்போது விரும்பினாலும் தேவையானதை அந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம். கடந்த ஓராண்டு காலமாக நரேந்திரமோடிக்கு பின்னாலும் அம்பானிதான் இருந்து வருகிறார். நாடு முழுவதிலும் விமானம், ஹெலிகாப்டர்களில் பறந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்குப் பணம் எங்கிருந்து வந்தது?
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக மின்சார நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யவில்லை. 5 நாட்களில் அந்தப்பணியை நாங்கள் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்கள் ஊழலை ஒழிக்கவில்லை. ஷீலா தீட்சித் செய்த ஊழலுக்கு எதிராக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.
இதையெல்லாம் செய்யாமல், ஆட்சி நிர்வாகத்தை மட்டும் பாருங்கள் என்று அவர்கள் கூறினார்கள். ஊழல் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது ஆட்சியாளர்களின் வேலை இல்லையா?
நான் தனி மனிதன் அல்ல. நான் உங்களில் ஒருவன் ஆட்சியில் அமருவதற்காக நான் அரசியலுக்க வரவில்லை. ஊழலை ஒழிப்பதற்காக எங்கள் அமைச்சர்களில் சிலர் இரவு பகலாக தூங்காமல் மக்கள் பணியாற்றினார்கள்.
ஊழலை ஒழிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி விலக தயாராக இருக்கிறேன். கடைசியாக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதெல்லாம், ‘நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். எங்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுங்கள். அதன் மூலம் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட இந்த நாட்டின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்யவும் நாங்கள் தயாக இருக்கிறோம்
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications