For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1984 சீக்கியர் படுகொலை குறித்த ராகுல் கருத்துக்கு ஜேட்லி கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Arun Jaitley slams Rahul Gandhi's 'ideas' on 1984 riots
டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலை குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, சீக்கியர் படுகொலை வேறு- குஜராத் படுகொலை வேறு. குஜராத் படுகொலையை அம்மாநில அரசு நிகழ்த்தியது. சீக்கியர் படுகொலையை ராஜிவ் அரசு தடுக்க முயற்சித்தது என்று கூறியிருந்தார்.

இதை நிராகரித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளதாவது:

1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ?

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து வன்முறை வெடித்தது.. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர்.

ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அப்படியான நிலையில் குஜராத் அரசுதான் 2002ஆம் ஆண்டு வன்முறையை நிகழ்த்தியது என்று எப்படி ராகுல் சொல்லலாம்? ஊழல் விவகாரத்தில் சமரசம போக்கைத்தான் ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார். வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் என்கிறார் ராகுல். ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா.. ராகுல் மீது நம்பிக்கை வைத்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்றார்,

English summary
Bharatiya Janata Party (BJP) leader Arun Jaitley on Friday came down heavily on Congress vice president Rahul Gandhi for saying that Narendra Modi-led Gujarat government "abetted and pushed" 2002 riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X