ஜனவரி 3-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் உத்தரவு
டெல்லி: வரும் சனிக்கிழமையன்று டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜனவரி 3ம் தேதிக்குள் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க, 8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. இதையடுத்து ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஆட்சியமைக்க அழைக்கும்படி உரிமை கோரினார்.

இதுபற்றி ஆளுநர் அளித்த பரிந்துரையை அடுத்து குடியரசுத்தலைவர் சம்மதம் தெரிவித்தார். டெல்லியில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க தாமதமானதால், நாளை நடைபெறுவதாக இருந்த கெஜ்ரிவாலின் பதவியேற்பு, வரும் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது. அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
கெஜ்ரிவாலின் பதவியேற்புக்குப் பின்னர் வரும் ஜனவரி 1-ம் தேதி சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், பதவியேற்ற 7 நாட்களுக்குள் கெஜ்ரிவால் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்க வேண்டும் என்ற குடியரசுத்தலைவரின் உத்தரவுப் படி, ஆளுநர் நஜீப் ஜங் வரும் ஜனவரி 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆம் ஆத்மி கட்சியிடம் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications