கெஜ்ரிவால் ஜனதா தர்பார்: தலைமைச் செயலகம் முன் குவிந்த மக்கள்
டெல்லி: வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘தலைமைச் செயலக வாசலில் அமர்ந்து மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கோர் அதிகாலை முதல் மனுக்களுடன் குவிந்துள்ளனர்.
டெல்லியின் முதல்வராக பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தேசிய தலைப்பு செய்திகளில் நாள் தோறும் பேசப்படும் நபராக அரவிந்த் கெஜ்ரிவால் மாறி வருகிறார்.
முதல்வன்' படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் அர்ஜுன் பாணியில்
ஊழல் அதிகாரிகளின் மீது நடவடிக்கை, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி சஸ்பெண்ட், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பற்றி புகார் அளிக்க ‘ஹெல்ப் லைன்' நம்பர் என பல்வேறு அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மக்கள் சந்திப்பு
இதேபோல் மக்களின் குறைகளை தீர்க்கும் முதல்கட்ட நடவடிக்கையாக டெல்லிவாசிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற முடிவு செய்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஜனதா தர்பார் நடைபெறும் அறிவித்தார்.
அதன்படி, இன்று டெல்லி தலைமைச் செயலக வாசலில் அமர்ந்து அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். இதனால் காலை முதலே தலைமைச் செயலக வாசலில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளனர்.

அமைச்சர்களும் சந்திப்பு
அதுமட்டுமின்றி, வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அனைத்து துறை அமைச்சர்களும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் குறை தீர்ப்பு
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
ஒரு அரசை பொருத்தவரை மக்களின் குறை தீர்ப்பு என்பது மிகப்பெரிய கடமையாகும். அவற்றை தீர்த்து வைக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை. மக்களின் குறை என்பது நோய்க்கான ஒரு அறிகுறி மட்டும் தான். அதற்கான மூலக் காரணம் வேறு எங்கோ ஓரிடத்தில் உள்ளது.

உடனடித் தீர்வு
வாரந்தோறும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் 5 வகையாக பிரிக்கப்படும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற அவசர பிரச்சனைகளுக்கு மனுக்களை பெறும்போதே உடனடியாக தீர்வு காணப்படும். இதர மனுக்கள் மீது எவ்வளவு நாட்களில் தீர்வு காணப்படும் என்ற கால நிர்ணயத்தை அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மனுதாரர்களுக்கு தெரிவிப்பார்கள் என்றார்.

கொட்டும் பனியில்
இன்று காலை 9.30 மணியில் மக்கள் தர்பார் டெல்லியில் தொடங்கியுள்ளது. எனினும் முதல்வரை சந்திக்க கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலிருந்தே நூற்றுக்கணக்கான டெல்லிவாசிகள் கையில் மனுக்களுடன் தலைமைச் செயலக வாசலில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications