நாளை மோடியைச் சந்திக்கிறார் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் வருங்கால முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு விடுக்க உள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோகமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாளை பிரதமரை சந்திக்கின்றார் கெஜ்ரிவால்.
தேர்தல் பிரசாரத்தின்போது முதுகில் குத்தியவர் கெஜ்ரிவால் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் மோடி. மேலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டபோது எதிர்த்துப் போட்டியிட்ட கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவை படு தோல்வி அடையச் செய்துள்ள கெஜ்ரிவாலும், அவரை கடுமையாக விமர்சித்த மோடியும் நாளை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டசபை கட்சி தலைவர் மற்றும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய டெல்லி போலீஸ் கமாண்டோக்கள் 12 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications