நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்காமல் பம்மும் அர்னாப் கோஸ்வாமி: கேஜ்ரிவால் தாக்கு
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியிடம் மற்ற தலைவர்களிடம் கேட்பது போல் கேள்வி எதுவும் கேட்காமல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி பம்முகிறார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
ஏ.பி.பி தொலைக்காட்சிக்கு ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பல ஊடகங்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊடகங்கள் ஒருபோதும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கேள்விக்குள்ளாக்குவதில்லை.

குஜராத்தில் வேளாண்வளர்ச்சி அதிகம் என்பது பொய். இந்த பொய் குறித்து மோடியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவது கிடையாது. மோடி பேசுவதை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு அவர் மீதான புகார்கள், அவரது தவறுகளை எங்கோ ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் போடுகின்றன இந்த ஊடகங்கள்.
டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமி, இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், நீங்கள் ராஜினாமா செய்வீர்களா? இல்லையா? என்று இந்த தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது என மோடியிடம் கேட்பாரா? ஏன் இதுவரை மோடியிடம் இத்தகைய கேள்வி எழுப்பப்படவில்லை?
குஜராத்தில் விவசாயிகள் மிக மோசமாக நடத்தப்படுகிற நிலையில் அவர்களின் பாதுகாவலனாக எப்படி மோடி இருக்க முடியும்?
இவ்வாறு கேஜ்ரிவால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications