கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்தும் இல்லை கருத்தும் இல்லை.. மவுனம் காக்கும் ஹசாரே
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருக்கிறார். டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமையும் கோரியுள்ளார் கெஜ்ரிவால்.
இது குறித்து செய்தியாளர்கள் அன்னா ஹசாரேவிடம் கருத்து கேட்டபோது, அவர்களுக்கு எது நல்லது என படுகிறதோ அதை செய்கிறார்கள். இதில் நான் கருத்து எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் லோக் ஆயுக்தா குறித்து கெஜ்ரிவால் என்ன செய்யப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. அதை அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இது அவரைப் பொறுத்தது என்றும் ஹசாரே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications