Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்லீப்பர்செல்கள்".. ஜெயிச்சப்பறம் ஜம்ப் ஆக போறாங்களாமே.. போட்டு தாக்கிய கெஜ்ரிவால்.. டென்ஷனில் பாஜக

பாஜக, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: கோவா அரசியல் குறித்து, முக்கியமான ஒரு குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் மீது வீசியுள்ளார்.. இதனால் பாஜக கொந்தளித்து போயுள்ளது.. காங்கிரஸை குறை சொன்னால், பாஜக டென்ஷன் ஆக என்ன காரணம்?

கோவாவில் 14-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜகவும் காங்கிரசும் வழக்கம்போல களத்தில் மோதக்கூடிய கட்சிகள் என்றாலும், இந்த முறை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் புதிதாக களமிறங்கி உள்ளன..

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதில் பாஜகவை தோற்கடிக்க மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி மும்முரமாகி உள்ளது.. இதற்காகவே கோவாவுக்கு அடிக்கடி விசிட் அடித்து கொண்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. மக்களை தன் பக்கம் ஈர்க்க இவர் முதலில் கையில் எடுத்தது தேர்தல் அறிவிப்புகள்தான்.. "முன்னாடி எல்லாம் காங்கிரஸ், பாஜகவை விட்டால் வேறு வழியில்லாமல் இந்த மாநில மக்கள் இருந்தார்கள்.. இப்ப அப்படி இல்லை.. மாற்றத்தை விரும்புகின்றனர்...

 இலவசங்கள்

இலவசங்கள்

ஆம் ஆத்மி கட்சி கோவா மக்களுக்காக 13 அம்ச செயல் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அப்படி வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்... ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் கோவாவில் சுரங்கங்கள் அனைத்தும் திறக்கப்படும்... ஒவ்வொரு குடும்பமும் 5 ஆண்டில் தலா 10 லட்சம் ரூபாய் அளவுக்கு பயனடையும். 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இலவசமாக கொடுக்கப்படும்..

 7 அம்ச திட்டம்

7 அம்ச திட்டம்

18 வயதை கடந்த இரண்டு பெண்கள் இருந்தால் மாதம் 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் பெற முடியும்.. வேலையில்லாமல் இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்" இப்படி 7 அம்ச திட்டங்களை சொல்லவும்தான், கோவா மக்கள் ஆம் ஆத்மி பக்கமே தங்கள் கவனத்தை செலுத்தி ஆரம்பித்தனர். இந்நிலையில், ஒரு பகீர் தகவலை கெஜ்ரிவால் கிளப்பி விட்டுள்ளார்..

 காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

அதாவது இந்த தேர்தலில் காங்கிரஸ்காரர்களின் பல முக்கிய புள்ளிகள், இந்தமுறை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு தாவ முடிவு செய்திருக்கிறார்களாம்.. அதனால் நீங்க யாராவது காங்கிரசுக்கு ஓட்டு போட்டீர்களானால், அது மறைமுகமாக பாஜகவுக்கு ஓட்டுப்போடுவதாகவே அர்த்தமாகிவிடும் என்பதால், தயவுசெய்து யாரும் பாஜகவுக்கும் ஓட்டு போடாதீங்க, காங்கிரசுக்கும் ஓட்டுப் போடாதீங்க என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 பாஜக

பாஜக

நேற்றை தினம் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, சாலசெட் போன்ற பல்வேறு தொகுதிகளில் பாஜகவை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதாக கேள்விப்பட்டேன்.. அவர்கள் வெற்றி வெற்றி பெற்ற பிறகு பாஜகவில் இணைந்து கொள்வார்கள்.. அதனால் மக்கள் எல்லாரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.. நீங்க ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடாவிட்டால், நேரடியாகவே பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்.. மக்கள் மத்தியில் இப்போதைக்கு பாஜக, ஆம் ஆத்மி என்ற 2 கட்சிகள் மட்டுமே இருக்கின்றன..

 2 ஆப்ஷன்கள்

2 ஆப்ஷன்கள்

2 ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கின்றன.. ஒன்று நேரடியாகவே ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடுவது, இன்னொன்று மறைமுகமாக காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு, பாஜகவை வெற்றி பெறவைப்பது.. அதனால யோசிச்சு முடிவெடுங்க" என்று கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.. அதாவது காங்கிரஸ் வேட்பாளர்களில் பாஜகவின் ஸ்லீப்பர்செல்களை பற்றி கெஜ்ரிவால் போட்டுஉடைத்துள்ளார்.

தமிழகம்

தமிழகம்

இந்த யுக்தி அப்படியே நம்ம தமிழகத்திலும் ஒருமுறை நடந்துள்ளது.. சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு தேர்தலில், திமுகவினர் இப்படித்தான், நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.. அதாவது, நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போட்டால், அது அப்படியே பாஜகவுக்கு ஓட்டுப்போடுவதற்கு சமம், அதானல் திமுகவுக்கு நேரடியாகவே ஓட்டுப்போடுங்கள் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்திருந்தனர்.. அந்த ராஜதந்திரம் போலவேதான், கோவா அரசியலிலும் பேச்சு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+