தீவிரமடையும் தலித்துகள் போராட்டத்தால் அச்சம்.. கர்நாடக பயணத்தையே ரத்து செய்த அமித்ஷா
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வலு குறைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுக்க தலித் ஜாதியினரின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலித் அமைப்புகள் பாரத் பந்த்துக்கும் அழைப்புவிடுத்துள்ளன. இதனிடையே, பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடகாவில் மேற்கொள்ளவிருந்த தனது இரண்டு நாள் பிரச்சார பயணத்தை ஒத்திவைத்துள்ளார். கட்சியின் வட்டாரங்கள் ஷா இந்த மாதத்தில் பின்னர் ஒரு தேதியில் பயணத்தை மேற்கொள்ளப்போவதாக கூறியுள்ளார். கர்நாடகாவில் மே 12 ம் தேதி சட்டசபை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகாவில் கணிசமாக தலித் சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். வழக்கமாக இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள். கடந்த இரு தேர்தல்களில் தலித்துகளின் கணிசமான வாக்குகளை பாஜக பெறத் தொடங்கியது. இந்த நிலையில், அமித்ஷா தலித்துகளை சமாதானப்படுத்திவிட்டே கர்நாடகா பக்கம் தலை வைப்பார் என தெரிகிறது.
லோக்சபா எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, தலித்துகள் பற்றி மோசமாக கூறிய வார்த்தைக்காக கர்நாடகாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1989ல் இருந்து நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் வலுவிழந்து, நீர்த்துப்போகும் விதத்தில் அண்மையில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 1989ம் ஆண்டு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தலித் அமைப்புகள் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications