வந்தே பாரத்தோட அடையாளமே இதுதானே.. ஆனா, இன்னைக்கு பிரதமர் தொடங்கி வச்ச ரயிலோட வேகத்த பாருங்களேன்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இந்த ரயிலின் வேகம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் முழுவதுமான மின் மயமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வந்தே பாரத் ரயில் அம்மாநில ரயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைக்கும் இரண்டாவது ரயில் சேவை இதுவாகும்.
முன்னதாக கடந்த 18ம் தேதி ஒடிசாவின், பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக அவர் தொடங்கி வைத்திருந்தார். இதனையடுத்து இன்று இரண்டாவது முறையாக காணொலி வாயிலாக இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியிலிருந்து டெல்லி வரை பயணிக்கிறது. செமி-ஸ்பீடு வரிசையில் இயக்கப்படும் 6வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

டேராடூனுக்கும், டெல்லிக்கும் சுமார் 314 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் 7 ரயில்கள் இதுவரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் 413 கி.மீ தொலைவை கடக்க சுமார் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் தொடங்கி, 9 மணி நேரம் 55 நிமிடங்கள் வரை ரயில்கள் எடுத்துக்கொள்கின்றன. எனவே இந்த பயண நேரத்தை குறைக்க வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் 314 கி.மீ தொலைவை, வெறும் 4 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து விடும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் நிலவுகிறது. அதாவது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணம் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட வந்தே பாரத் ரயில் இந்த பாதையில் வெறும் 64 கி.மீ வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகரான சுமந்த் ராமன் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். அதாவது, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் 8 ரேக் கோச்களை கொண்ட வந்தே பாரத் ரயிலாகும். நாளொன்றுக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு ரயில் 64 கி.மீ வேகம் எனில் இரண்டு ரயில்களின் வேகம் 128 கி.மீதானே? என்று கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications