'சோட்டா' ஆதரவாளர்களைப் போட்டுத் தள்ள தாவூத் திட்டம்... மும்பையில் மோதல் வெடிக்கலாம் என எச்சரிக்கை
மும்பை: சோட்டா ராஜனை சிபிஐ குழுவினர் இந்தியா அழைத்து வரும் நாளில், மும்பையி்ல் தாவூத் இப்ராகிம் கும்பலுக்கும், சோட்டா ராஜன் கும்பலுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கலாம் என ஐபி எச்சரித்துள்ளது. சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை போட்டுத் தள்ள தாவூத் கும்பல் திட்டமிட்டிருப்பதாகவும், அதேபோல தாவூத் கும்பலைச் சேர்ந்தவர்களை சோட்டா ராஜன் கும்பல் போட்டுத் தள்ளக் கூடும் என்றும் ஐபி தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு மோதல் வெடிக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
சோட்டா ராஜன் மீதான கோபத்தைக் காட்ட அவரது ஆதரவாளர்களில் ஒருவரை போட்டுத் தள்ள தாவூத் கும்பல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

போட்டா போட்டி
தாவூத் இப்ராகிமும், சோட்டா ராஜனும் ஒரு காலத்தில் இணைந்து செயல்பட்டவர்கள். ஆனால் பின்னர் விரோதிகள் ஆகினர். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ள துடித்து வருகின்றனர். ஆனால் யாருக்குமே இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

இந்தோனேசியாவில் சிக்கிய சோட்டா
தாவூத்தின் பல முயற்சிகளிலிருந்து சோட்டா ராஜன் தப்பி விட்டார். அதேசமயம், சோட்டா ராஜனால் தாவூத்தை நெருங்கக் கூட முடியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தோனேசியாவில் போலீஸிடம் சிக்கி விட்டார் சோட்டா ராஜன். அவரை சிபிஐ இந்தியாவுக்குக் கொண்டு வரவுள்ளது.

போட்டுத் தள்ளுவோம்
இந்த நிலையில் சோட்டா ராஜன் மீதுள்ள கோபத்தைக் காட்ட அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் சமயத்தில் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த தாவூத் கும்பல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது.

சந்தேகம்
மேலும் சோட்டா ராஜனையும் போட்டுத் தள்ள பல்வேறு வழிகளில் தாவூத் கும்பல் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுவதால் சோட்டா ராஜன் மும்பைக்கு நேரடியாக அழைத்து வரப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று இரவு வருகிறார்
இன்று இரவு அனேகமாக சோட்டா ராஜன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முதலில் டெல்லி கொண்டு வரப்படுவார் என்றும் பின்னரே மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதில் தெளிவான தகவல் இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications