Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asaram Bapu: பாலியல் வன்கொடுமை வழக்கில்.. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்.. குஜராத் கோர்ட் அதிரடி

குஜராத் ஆசாராம் பாபு சாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவிற்கு, பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆசாராம் பாபுவுக்கு இந்த ஆயுள் தண்டனையை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் பிரபல சாமியார் ஆசாராம் பாபு... இவர் தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்பவர்.. இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.. நாளடைவில் இந்த சாமியார் பிரபலமாகவும், இவரை தேடி பலரும் இந்த ஆசிரமத்துக்கு வர துவங்கினர்.. மேலும், இவரது ஆசிரமத்திலேயே சில பெண்கள், தங்கி சேவை செய்தும் வருகிறார்கள்..

ஜெயில் கம்பிகள்

ஜெயில் கம்பிகள்

இந்த பெண் சீடர்களிடம் சாமியார் தன்னுடைய வேலையை காட்டி வந்துள்ளார்.. அத்துமீறி நடக்கவும், போலீஸ்வரை புகார் போயுள்ளது.. இது தொடர்பான புகாரின்பேரில், கடந்த 2013-ம் ஆண்டு, ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்... அதாவது, தன்னுடைய ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, விஸ்வரூபமெடுத்தது.. அந்த வழக்கில் கடந்த 2018-ல் அவருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது.. இதற்கு பிறகு ஜெயிலில் கம்பி எண்ண ஆரம்பித்தார் சாமியார்.. ஆனால், எதிர்பாராதவிதமாக திடீரென மற்றொரு புகார் இவர்மீது கிளம்பியது.

பலதடவை பலாத்காரம்

பலதடவை பலாத்காரம்

அகமதாபாத் புறநகரில் உள்ள இவரது ஆசிரமத்தில், சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண், சீடராக இருந்தார். அவர் ஆசிரமத்திலேயே தங்கி வந்துள்ளார்.. இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை, ஆசிரமத்தில் தங்கி இருந்துள்ளார்.. அப்போது இவரை சாமியார் பலதடவை பலாத்காரம் செய்துவிட்டாராம்.. அதனால் போலீசில் இந்த பெண் கடந்த 2013-ல் புகார் தந்திருந்தார்.. அதன்பேரில், ஆசரம் பாபு, அவருடைய மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது... ஆனால், விசாரணையின்போது ஒருவர் இறந்து விட்டார்... மீதி 7 பேர் மீதும், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

ஆயுள் ஆயுள்

ஆயுள் ஆயுள்

இந்த வழக்கின் விசாரணைகள் ஏற்கனவே முழுமையாக முடிந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு தரப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி டி.கே.சோனி தீர்ப்பினை அளித்தார்.. சாமியார் ஆசரம் பாபு மீதான கற்பழிப்பு, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அவர் குற்றவாளி என்றும் அறிவித்தார்... சாமியாரின் மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், உள்ளிட்ட 6 பேருக்கும் போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி நீதிபதி விடுதலை செய்தார்...

பரபர தீர்ப்பு

பரபர தீர்ப்பு

மேலும், ஆசாராம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.. அதன்படி ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்தின் தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. ஆசாராம் பாபு, ஏற்கனவே, பலாத்கார வழக்கில் இப்போது ஜோத்பூரில் உள்ள ஜெயிலில் உள்ள நிலையில், இந்த ஆயுள் தண்டனையும் அவருக்கு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+