தொடரும் பயங்கரம்.. பலாத்கார சாமியார் ஆசாரம் பாபுவுக்கு எதிரான சாட்சி மீது துப்பாக்கிச் சூடு!
ஷஜான்பூர்: பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியார் ஆசாரம் பாபுவுக்கு எதிரான மற்றொரு சாட்சி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆசாராம் பாபு மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் 121 ஆவணங்களும் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சாட்சிகள் மீது தொடர்ச்சியாக ஆசாராம் பாபு அடியாட்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே 8 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கிர்பால்சிங் என்ற மற்றொரு சாட்சி மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஷஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்த கிர்பால் சிங் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பேரலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் சுமத்தியுள்ள பெண்ணின் தந்தையின் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் கிர்பால் சிங். கடந்த சில நாட்களாக ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக கூடுதல் நகர் மாஜிஸ்திரேட்டிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் சமையல்காரராக பணியாற்றிய மற்றொரு முக்கிய சாட்சி ஒருவர் முசாபர்நகரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications