பிடிபி எம்எல்ஏக்கள் 2 பேர் திடீரென ஆதரவு.. ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்.. ராஜஸ்தானில் திருப்பம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று திடீரென கவர்னருடன் சந்திப்பு நடத்தினார். கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுடன் அசோக் கெலாட் சந்திப்பு நடத்தினார்.
ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு சச்சின் பைலட்டிற்கு துணை முதல்வர் பதவி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவி இரண்டும் பறிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இவருக்கு ஆதரவாக இருந்த 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்எல்ஏக்களை ஜூலை 21 வரை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்று ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு எப்போது என்ன திருப்பம் நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சச்சின் பைலட் தரப்புக்கு அவரையும் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தரப்பிற்கு தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 100 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை.
இந்த நிலையில் முதலில் அசோக் கெலாட் தரப்புக்கு பாரதிய டிரைபல் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் ஆதரவு தர முடியாது என்று கூறி இருந்தனர் . பிடிபி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜ்குமார் மற்றும் மகேஷ் பாய் விஸ்வாஸ் இருவரும் இப்படி தெரிவித்து இருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக இவர்கள் இருவரும் அசோக் கெலட்டை சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.
இதனால் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்துதான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று திடீரென கவர்னருடன் சந்திப்பு நடத்தினார். கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுடன் அசோக் கெலாட் சந்திப்பு நடத்தினார்.
தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக அசோக் கெலாட் ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான எம்எல்ஏக்கள் கடிதத்தை அவர் ஆளுநரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications