சப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத நிலையில், அவரை மீண்டும் வந்து விடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பத்தில் இன்று முக்கியமான திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பல நாட்களாக நடந்து வந்த மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
திடீர் என்று தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக சச்சின் பைலட் களமிறங்கி உள்ளார். இவர் ஆட்சிக்கு எதிராக களமிறங்கி இருந்தாலும் ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இவருக்கு இல்லை என்கிறார்கள்.

எண்ணம் இல்லை
ஆம் இவருக்கு ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் கிடையாது. இவர் தனக்கு தேவையான மரியாதை கிடைக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார். அதோடு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் பதிவு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். முக்கியமாக உள்துறை , நிதித்துறை உள்ளிட்ட அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நினைக்கிறார். அவருக்கு ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்கிறார்கள்.

பாஜக எண்ணம் இல்லை
இந்த பிரச்சனையில் பாஜக சத்தமின்றி இருப்பது போல தெரிகிறது.ஆனாலும் பாஜக இன்னொரு பக்கம் அமைதியாக சச்சின் பைலட்டிற்கு கொக்கி போட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் பாஜகவில் சேரும் அழைப்பை சச்சின் பைலட் முற்றாக மறுத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். அவருக்கு பாஜகவில் இணையும் விருப்பம் இல்லை, காங்கிரசில் அவருக்கு தகுந்த மரியாதை வேண்டும் என்பது மட்டுமே கோரிக்கை என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அழைப்பு விடுத்தது
அதேபோல் நிலைமை இப்படி இருக்க இன்னொரு பக்கம் சச்சின் பைலட்டிற்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்கிறார்கள். தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று அவர் கூறினார். ஆனால் அவருக்கு உண்மையில் 12-17 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கலாம். அசோக் கெலாட்டிற்கு 107 எம்எல்ஏக்கள் வரை ஆதரவு தருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

எதுவும் ஆகாது
இதனால் அங்கே பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் பெரும்பாலும் அசோக் கெலாட் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. ஆனால் வரு ம் காலத்தில் மீண்டும்சச்சின் பைலட் பிவெரச்சனையாக உருடுக்கலாம் என்பதால் காங்கிரஸ் அவரை அழைத்து சமாதானம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதனால் நேற்றில் இருந்து காங்கிரஸ் கட்சி சச்சின் பைலட்டிற்கு அடுத்தடுத்து அழைப்பு விடுத்து வருகிறது.

தொடர் அழைப்பு
காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுரஜ்வாலா தொடங்கி அஹமது பட்டேல் வரை சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மீண்டும் வாருங்கள், பேசி தீர்த்துக் கொள்ளலாம். பிரச்சனை கைமீறி போகவில்லை. கோரிக்கையை கேட்கிறோம் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இன்று கடிதம் மூலமும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதனால் சச்சின் பைலட் இன்று மனம்மாற வாய்ப்பு உள்ளதா? காங்கிரஸ் பக்கம் மீண்டும் செல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!











Click it and Unblock the Notifications