இன்றுடன் முடியும் ‛கெடு’.. ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை விரைவு நீதிமன்றத்தில் தாக்கல்? பரபர தகவல்
வாரணாசி: ஞானபாவி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையின் நகலை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்க விரைவு நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளதாக, இந்த கோவிலை வழிபட அனுமதி கோரியும் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து சர்ச்சைகள் கிளம்பின. முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இருப்பினும் சட்ட ரீதியான போராட்டத்தை கையில் எடுத்தனர். அதாவது இஸ்லாமியர்கள் தரப்பில் ஆய்வுக்கு தடைக்கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றனர். ஆனால் 2 நீதிமன்றங்களும் ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட்மாதம் ஆய்வை தொடங்கியது.
இந்த ஆய்வு தொடர்ந்து வந்த நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் ரகசியமாக உள்ளது. மேலும் 4 வாரங்கள் வரை இந்த ஆய்வறிக்கை தகவலை வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பிரச்சனை ஏற்படலாம் என இந்திய தொல்லியல் துறை சார்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே தான் ஞானவாபி வளாகத்தில் இருப்பதாக கூறப்படும் கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி விரைவு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்த வழக்கில் ஆய்வறிக்கையின் நகலை ஜனவரி 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடு என்பது இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் விரைவு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஆய்வறிக்கையின் மீது விசாரணை தொடங்க உள்ளதால் மீண்டும் ஞானபாவி வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications