டெல்லியில் வரிசையில் காத்திருக்க சொன்ன பார்பரை சுட்டுக் கொன்ற நபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தன்னை காத்திருக்குமாறு கூறிய முடிதிருத்தும் தொழிலாளியை ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் இருக்கும் முடிதிருத்தும் கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அஃபாம் என்பவர் சென்றுள்ளார். கடைக்குள் நுழைந்த அவர் அங்கிருந்த இக்ராரிடம் தனக்கு முடி வெட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Asked to wait, man kills barber

அதற்கு இக்ராரோ வரிசையில் காத்திருங்கள் முடிவெட்டி விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அஃபாம் இக்ராரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இக்ராரின் அண்ணனும், முடி திருத்தும் தொழிலாளியுமான முகமது இர்ஷாத் சல்மானியிடம்(30) தெரிவித்துள்ளார். உடனே சல்மானி கடைக்கு விரைந்து வந்து அஃபாமை காத்திருக்குமாறு கூறியுள்ளார். அஃபாமோ சல்மானியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மார்பில் குண்டு பாய்ந்த அவர் பலியானார்.

இந்த சம்பவம் பற்றி ஜாமியா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஃபாமை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+