மே 4 ஜட்ஜ்மெண்ட் டே-க்கு ரெடியாகும் அசாம்.. 8500 பேர் களத்தில் இறக்க கோயல் திட்டம்!
அசாம் சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டதாக முதன்மை தேர்தல் அதிகாரி அனுராக் கோயல் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, 126 தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணி மிகவும் சீராகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

மே 4 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 8,500 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 35 மாவட்டங்களில் 40 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மாவட்டங்களில் ஒரே மையம் அந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை பணியின் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், கொக்ராஜார், தின்சுக்கியா மற்றும் ஜோர்ஹாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா இரண்டு மையங்களும், நகாவோன் மாவட்டத்தில் மூன்று மையங்களும் செயல்படும் என அனுராக் கோயல் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் அசாம் மாநிலம் கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான வாக்காளர் பங்கேற்பைப் பதிவு செய்துள்ளது. பார்பேட்டா, துப்ரி, கோல்பாரா, போங்கைகான் மற்றும் சவுத் சல்மாரா ஆகிய மாவட்டங்களில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் ஸ்ட்ராங்க் ரூம்-ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய 25 சிஆர்பிஎஃப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இந்த இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் மூலம் வாக்கு எண்ணிக்கை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் கோயல், "தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை சுமூகமாகவும், வெளிப்படையாகவும் நடத்த முழுமையாக தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அசாம் சட்டமன்ற தேர்தலில் மொத்த 126 இடங்களிஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை. ஆனால், எக்ஸிட் போல் முடிவுகளின்படி என்டிஏ 85 முதல் 101 இடங்கள் வரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications