2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. அசாமில் நிறைவேறிய சட்டம்.. சிறப்பம்சங்கள் இதுதான்
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் முதல் மனைவி, கணவன் இருக்கும்போது அவருக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை + அபராதம் விதிக்கும் மசோதா சட்டசபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் சிறப்பம்சம் பற்றிய விவரம் வருமாறு:
அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் குளிர்கால சட்டசபை தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டததொடரில் ‛தி அசாம் பலதார திருமண மசோதா 2025' ( "The Assam Prohibition of Polygamy Bill, 2025,") கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவை முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்பிறகு இந்த மசோதா எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா பலதார திருமணத்தை தடை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது. விரைவில் சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த மசோதாவின்படி ஒருவர் தனது கணவன், மனைவி இருக்கும்போது 2 வது திருமணம் செய்ய முடியாது. முதல் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்போது 2வது திருமணம் செய்தால் இந்த மசோதாவின்படி நடவடிக்கை பாயும்.
அதாவது விவாகரத்து பெறாமல் இன்னொருவரை திருமணம் செய்தால் இந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி அதிகப்படியான தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இந்த மசோதா அசாமில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். இருப்பினும் இந்த மசோதா என்பது அரசியலமைப்பு 6வது அட்டவணை பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: ‛‛இந்த சட்ட மசோதா எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை. இஸ்லாம் மதம் பலதார மணத்தை அனுமதிப்பது இல்லை. இந்த சட்டத்தின் மூலமாக அவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக மாறலாம். இந்த மசோதா இஸ்லாமுக்கு எதிரானது இல்லை. இதனால் உண்மையான இஸ்லாமியர்கள் இந்த மசோதாவை வரவேற்பார்கள்.
இஸ்லாமிய நாடான துருக்கி பலதார திருமணத்தை தடை செய்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் தனியாக நடுவர் மன்றமே உள்ளது. நான் மீண்டும் அசாம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் யூசிசி (UCC) எனும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை(Uniform Civil Code) கொண்டு வருவேன். முதல் சட்டசபை கூட்டத்தொடரிலேயே அதனை செய்து காட்டுவேன்'' என்று கூறினார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications