For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பயங்கரவாதிகள் புகலிடம்! மதராஸாவை அதனால் தான் இடித்தோம்..!" சர்ச்சையை கிளப்பிய அசாம் முதல்வர்

Google Oneindia Tamil News

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் தனியார் மதராஸா இடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இப்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அவர் இப்போது கூறியுள்ள கருத்துகளை பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மதராஸா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல்வருக்கும் 'ஒரே சண்டை..' ட்விட்டரே வேடிக்கை பார்க்குது!அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அசாம் முதல்வருக்கும் 'ஒரே சண்டை..' ட்விட்டரே வேடிக்கை பார்க்குது!

 மதராஸா இடிப்பு

மதராஸா இடிப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள தனியார் மதராஸா ஒன்று, அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்த மதரஸாவை மாவட்ட நிர்வாகத்தினர் இன்று இடித்தனர். இந்தச் சம்பவம் அங்குப் பேசுபொருளானது.

 பயங்கரவாத மையம்

பயங்கரவாத மையம்

மதரஸாவை அரசு இடித்து அப்புறப்படுத்தியதை உறுதி செய்த அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பயங்கரவாதிகளின் மையமாக இவை உள்ளதாலேயே இடிக்கப்பட்டதாகவும் இப்படி இடிக்கப்படும் இரண்டாவது மதராஸா இது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஜாமியுல் ஹுதா அகாடமி என்ற மதராஸாவை கட்டியதாக அக்பர் அலி மற்றும் அப்துல் கலாம் ஆசாத் ஆகிய இரு சகோதரர்கள் பார்பெட்டாவில் கைது செய்யப்பட்டனர்.

 தலைமறைவு

தலைமறைவு

அதைத் தொடர்ந்து இந்த மதராஸா இடிக்கப்பட்டது. இந்த இரு சகோதரர்களுக்கும் அல் கொய்தா ஜிகாதிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதலே தலைமறைவாகவே உள்ளனர். இந்த மதரஸாவை அவர்கள் கல்விக்காக எதுவும் பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அசாம் முதல்வர் சர்மா, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை அல்கொய்தா அமைப்பினரே பயிற்சி முகாமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

உதவி

உதவி

கைது செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளும் அல் கொய்தாவின் பார்பெட்டா என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். மேலும், வங்கதேச பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னர் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது சுமோன் என்ற நபரும் டீச்சர் என்ற போர்வையில் இன்று இடிக்கப்பட்ட மத்ரஸாவை விசாரணையில் தெரிய வந்தது. இவர் தான் அசாமில் இயங்கி வரும் ஸ்லீப்பர் செல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஆவர்.

 கெஜ்ரிவாலுக்கு பதிலடி

கெஜ்ரிவாலுக்கு பதிலடி

கவுகாத்தி மற்றும் டெல்லி பள்ளிகளை ஒப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்து இருந்த நிலையில், இதற்கும் பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கெஜ்ரிவாலுக்கு நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாது. வடகிழக்கு மாநிலங்கள் எந்தளவுக்குப் புறக்கணிக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது. டெல்லி முதல்வர் வடகிழக்கு மாநிலங்களைக் கேலி செய்கிறார். தலைநகரில் உட்கார்ந்து கொண்டு சிறு மாநிலங்களை ஒப்பிடுவது சரியா!" என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Assam Chief minister Himanta Biswa Sarma on Madrassas demolition: (அசாமில் இடிக்கப்படும் மதராஸா) Assam Chief minister latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X