For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கணும்.. அஸ்ஸாம் முதல்வரின் பகீர் பேச்சு.. புது ஆர்டர்

முஸ்லிம்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என அசாம் முதல்வர் கோரியுள்ளார்

Google Oneindia Tamil News

டிஸ்பூர்: புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், குடும்ப கட்டுப்பாட்டை செய்து கொள்ள வேண்டுமென்று அஸ்ஸாம் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமின் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்..

புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.. மேலும், 126 சட்டமன்ற இடங்களில் 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்குகிறார்கள்.

அஸ்ஸாம் புதிய முதல்வராக தேர்வு- பாஜக மேலிடத்துடன் மல்லுகட்டி சாதித்தேவிட்டார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா!அஸ்ஸாம் புதிய முதல்வராக தேர்வு- பாஜக மேலிடத்துடன் மல்லுகட்டி சாதித்தேவிட்டார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா!

 பிஸ்வா சர்மா

பிஸ்வா சர்மா

இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.. வடகிழக்கு ஜனநாயக கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்தான் இந்த பிஸ்வா சர்மா... 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் சரி, 2019 எம்பி தேர்தலிலும் சரி, 2021 சட்டப்பேரவை தேர்தலும்சரி, அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியமான நபரே இவர்தான்..

 விதிமுறைகள்

விதிமுறைகள்

இவர் இல்லாவிட்டால் அங்கு பாஜக காலூன்றி இருக்கவே முடியாது.. பாஜகவுக்கு இவர் பெரும் பணியாற்றியதால்தான், முதல்வர் பதவி இப்போதுஅவரை தேடி வந்தது. இந்நிலையில், இவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால்தான் நில ஆக்கிரமிப்பு போன்ற சமூக அச்சுறுத்தல்களை தீர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

விழா

விழா

பிஸ்வா சர்வமா முதல்வராக பொறுப்பேற்று, ஒரு மாசம் ஆகிவிட்ட நிலையில், நேற்று ஒரு விழா நடந்தது.. அந்த விழாவில் இவர் பேசும்போதுதான், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. அப்போது மேலும் பிஸ்வா பேசியதாவது: ''ஏழை மக்களுக்கு என்றுமே இந்த அரசு பாதுகாவலராக இருக்கும்... இருந்தாலும் இந்த மக்கள்தொகைதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது..

 சிறுபான்மை

சிறுபான்மை

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கும் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு அரசுக்கு இப்போது மிகவும் தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த மக்கள் தொகை பெருக்கம்தான், வறுமைக்கும், கல்வியில்லாததற்கும், முறையான குடும்ப கட்டுப்பாடு இல்லாததற்கும் காரணங்களான உள்ளன.

கல்வி

கல்வி

சிறுபான்மை சமூக பெண்களுக்குக் கல்வி வழங்க இந்த அரசு தயாராக இருக்கிறது.. அப்போதுதான், இப்படியான பிரச்சினையை நம்மால் எளிதாக சமாளிக்க முடியும்.. சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.. அவர்களும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. அதேபோல, கண்ணியமான குடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கையை, சிறுபான்மை சமூக மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

மடங்கள்

மடங்கள்

அதுமட்டுமல்லாமல், காடு, கோயில் மற்றும் வைணவ மடங்களுக்கு சொந்தமான நிலங்களின மீதான அத்துமீறலை அனுமதிக்கவும் முடியாது.. நிலங்கள் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கோயில், வன நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்" என்றார். பாஜக முதல்வரின் இந்த பேச்சுதான் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

English summary
Assam CM asks immigrant muslims to control population
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X