பனியனுடன் அலறி ரூமுக்குள் ஓடிய டாக்டர்.. ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. வைரல் வீடியோ
அசாம் டாக்டர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியவர்கள் கைதானார்கள்
புவனேஸ்வர்: கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென இறந்துவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அவருக்கு ட்ரிட்மென்ட் தந்த டாக்டரை கொடூரமாக தாக்கிவிட்டனர்.. இப்போது டாக்டர் ஐசியூவில் உள்ளார்..!
Recommended Video
அஸாமில் ஹோஜாய் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்..
டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்தும், பலனின்றி அந்த நோயாளி இறந்துவிட்டார்.. இதனால், ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர், அந்த மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

ஆஸ்பத்திரி
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஓடிவந்தனர்.. மற்றவர்கள் எல்லாம் வெளியே தெறித்து ஓடினாலும் அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் மட்டும் தன்னுடைய ரூமுக்குள் ஓடிப்போய் கதவை மூடிக் கொண்டார்.. அவர் பெயர் சேனாபதி. இதை பார்த்த அந்த கும்பல், டாக்டர் ரூமிமன் கதவை அடித்து நொறுக்கியது.. டாக்டரையும் ஆத்திரத்தில் கடுமையாக தாக்கியது..

வைரல் வீடியோ
இதில் டாக்டர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. பலத்த காயங்களுடன், பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்துவருகிறது. டாக்டரை சரமாரியாக தாக்கிய வீடியோ, தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இன்றைய பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு பல்வேறு டாக்டர்களும், நர்ஸ்களும், சிகிச்சை தந்து வருகிறார்கள்..

பாதிப்பு
ஆனால், அதை பற்றி எதுவுமே யோசிக்காமல், தொற்று பாதித்து இறந்தார் என்பதற்காக, சிகிச்சை தந்த டாக்டரையே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. டாக்டரின் சட்டையை கிழித்து பனியனுடன் ஓடவிட்டு அடித்துள்ளனர்.. இதற்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர்.

போராட்டம்
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தற்கு கண்டனம் தெரிவித்து, அசாம் மருத்துவ சேவை சங்கம் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்... ஆனால் ஐசியூ, கொரோனா வார்டுகளில் உள்ள டாக்டர்கள் மட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து அப்போதும் தங்கள் கடமையை செய்து கொண்டுதானிருந்தனர்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications