மோடி செம ஹேப்பி.. எக்ஸிட் போல் முடிவுகள் சொன்ன முக்கியமான விஷயம்!
அசாம் மாநிலத்தில் 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பல நிறுவனங்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த எக்ஸிட் போல் முடிவுகளை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் சட்டமன்ற தேர்தலில் மொத்த 126 இடங்கள், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை. ஆனால், எக்ஸிட் போல் முடிவுகளின்படி என்டிஏ 85 முதல் 101 இடங்ககாங்கிரஸ் கூட்டணி ள் வரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போகிறது.

- ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) - என்டிஏ 88-100 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 24-36 இடங்கள், மற்றவை கட்சிகள் மிகக் குறைவு (0-5).
- ஜேவிசி (JVC) - என்டிஏ 88-101, காங்கிரஸ் கூட்டணி 23-33, மற்றவை கட்சிகள் 0-5.
- மேட்ரைஸ் (Matrize) - என்டிஏ 88-98, காங்கிரஸ் கூட்டணி 22-32, மற்றவை கட்சிகள் 3-5.
- சாணக்கியா ஸ்ட்ராடஜீஸ் (Chanakya Strategies) - என்டிஏ 85-95, காங்கிரஸ் கூட்டணி 25-32, மற்றவை கட்சிகள் 6-12.
- போல் டைரி (Poll Diary) - என்டிஏ 86-101, காங்கிரஸ் கூட்டணி 15-26, மற்றவை கட்சிகள் 3-7.
- போல் ஆஃப் போல்ஸ் (Poll of Polls) - என்டிஏ 87-99, காங்கிரஸ் கூட்டணி 22-32, மற்றவை கட்சிகள் 3-7.
இந்த அனைத்து கணிப்புகளிலும் என்டிஏ தெளிவான முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் 36 இடங்களுக்குள் மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளின் பங்கு மிகக் குறைவு. இதனால் எக்ஸிட் போல் கணிப்பின் என்டிஏ கூட்டணி 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்படுகிறது.
எக்ஸிட் போல் முடிவுகள் என்டிஏ-வின் வலுவான அடித்தளம் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. அசாமின் வளர்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, குடியேற்றப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் மக்கள் என்டிஏ அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் என்டிஏ தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம்.
இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடி மக்களின் ஆதரவு என்டிஏ-வுக்கு கணிசமாக இருந்ததாக எக்ஸிட் போல் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அசாமின் பொருளாதார வளர்ச்சி, சாலை வசதிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் மக்களை ஈர்த்துள்ளன.
இந்த எக்ஸிட் போல் முடிவுகள் அசாம் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இறுதி முடிவுகள் வெளியாகும். ஆனால், தற்போதைய போக்கு என்டிஏ-வின் ஆட்சியை தொடரும் என்பதை காட்டுகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலுக்கும் முக்கியமானது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications